Breaking

Monday, August 10, 2020

தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்று (10ம் தேதி) கடைசி நாள் - 10th, ITI, 12th தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அப்டேட்டர் சர்வீசஸ் பிரைவேட் லிட். நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசின் தனியார் வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் இன்றைக்குள் (10ம் தேதி ) விண்ணப்பிக்க வேண்டும் என வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் அருணகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அப்டேட்டர் சர்வீசஸ் பிரைவேட் லிட். நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசின் தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளமான https://www.tnprivatejobs.in.gov.in என்ற முகவரியில் ஆக.10ம் தேதிக்குள் (இன்றைக்குள்) பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த காலிப் பணியிடங்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். செங்காடு, ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை, மாம்பாக்கம் சிப்காட் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்ற 600 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். உற்பத்தி பிரிவு பணியிடங்களான இந்த வேலைக்கு மெக்கானிக்கல் டிப்ளமோ, பி.இ மெக்கானிக்கல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 19 வயது முதல் 36 வயதுக்கு உட்பட்ட பத்தாம் வகுப்பு ஐடிஐ, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog