எம்ஜிஆர் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறியியல் நுழைவுத்தேர்வு ரத்து - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 18, 2020

Comments:0

எம்ஜிஆர் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறியியல் நுழைவுத்தேர்வு ரத்து

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலைப் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தற்போது உலகெங்கும் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றால் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையின் காரணமாகவும் மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்களின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டும் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவு தேர்வு (MGREEE) ரத்து செய்யப்படுகிறது. பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை மாணவ மாணவியர் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். மாணவ மாணவியர் தங்களின் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தங்களுக்கு தகுந்த பாடப்பிரிவில் சேர்ந்து படிக்கலாம். JEE(Main) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும். பொறியியல் சேர்க்கை தொடர்பாக மேலும் அறிந்துகொள்ள பல்கலைக்கழகத்தின் www.drmgrdu.ac.in இணையத்திலோ அல்லது 74012 20777 / 21777 மற்றும் 78239 44325 / 44326 தொலைபேசி எண்களையோ தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக, எம்.ஜி.ஆர்., நிகர்நிலை பல்கலையின் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, அப்பல்கலை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு, எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலைப் பல்கலையின், 2020- - 21ம் ஆண்டிற்கான, எம்.ஜி.ஆர்.இ.இஇ., எனும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு, கொரோனா காரணமாக ரத்து செய்யப்படுகிறது.பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை, மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும்.மாணவ- - மாணவியர், பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில், தங்களுக்கு தகுந்த பாடப்பிரிவுகளில் சேர்ந்து கொள்ளலாம். ஜே.இ.இ., மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ - -மாணவியருக்கு, சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும்.தகவலுக்கு, www.drmgrdu.ac.in என்ற இணையதளத்திலோ அல்லது, 74012- 20777, 74012- 21777, 78239 -44325 மற்றும் 78239 -44326 ஆகிய மொபைல் போன் எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews