Breaking

Saturday, July 25, 2020

பள்ளி மாணவர்களுக்கு 4 மொழிகளில் விளம்பரம் இல்லாத யூடியூப் சேனல்கள் தொடக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளி மாணவர்களுக்கு 4 மொழிகளில் விளம்பரம் இல்லாத யூடியூப் சேனல்களை மகாராஷ்டிர அரசு தொடங்கியுள்ளது. கரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன. புதிய கல்வியாண்டு தொடங்கி சுமார் 2 மாதங்கள் ஆகும் நிலையில், மாணவர்களின் கற்றல் பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கி நடத்தி வருகின்றன. இதற்கிடையே மத்திய, மாநில அரசுகள் சார்பில் கற்பித்தல் நிகழ்வுகளும் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மகாராஷ்டிர அரசின் சார்பில் மகாராஷ்டிரா மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இலவச யூடியூப் சேனல்களைத் தொடங்கியுள்ளது. முதலில் மராத்தி மற்றும் உருது மீடிய மாணவர்களுக்காக 4 சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளன, இதில் இரண்டு சேனல்கள் 1 முதல் 7 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்பிக்கும். மீதமுள்ள இரு சேனல்கள் 8 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கானவை. இவை அனைத்தும் இலவச, விளம்பரங்கள் ஏதுமின்றி ஒளிபரப்பாகும். 12-ம் வகுப்பு அறிவியல் மற்றும் வணிகவியல் பிரிவு மாணவர்களுக்குத் தனியாக யூடியூப் சேனல்கள் ஒளிபரப்பாக உள்ளன. அதேபோல ஆங்கிலம் மற்றும் இந்தி மீடிய யூடியூப் சேனல்கள் இரு நாட்களில் ஒளிபரப்பாக உள்ளன. இதற்கிடையே ஜியோ தொலைக்காட்சியில் 3 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்காக தனி சேனல் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog