தமிழகத்தில், கல்லுாரி இறுதியாண்டு கடைசி பருவத் தேர்வு தவிர்த்து, மற்ற பருவத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பல்கலை, கல்லுாரி மற்றும் பாலிடெக்னிக்குகளில் படிக்கும், இறுதியாண்டு தவிர்த்த, மற்ற மாணவர்கள் அனைவரும், இந்த பருவத்துக்கான தேர்வை எழுத தேவையில்லை. தேர்வு எழுதாமல் தேர்ச்சி வழங்க, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதும், பல்கலைகள், கல்லுாரிகள், பள்ளிகள் என, கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளதால், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, பல முறை அரசால் அறிவிக்கப்பட்டது. எனினும், தேர்வை நடத்த முடியவில்லை. இறுதியாக, 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் அறிவித்தார்.
முதல்வர் கடிதம்:
இது, மாணவ - மாணவியரிடம் மட்டுமின்றி, பெற்றோரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல, பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு, ஒரு பாடத்துக்கான தேர்வு மட்டும் நடத்தப்படவில்லை. அந்த தேர்வை, அரசு ரத்து செய்தது. மாணவர்கள் அனைவரும், அந்த பாடத்தில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதுவும், மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர் தரப்பிலும் வரவேற்பை பெற்றது. பிளஸ் 2 தேர்வு நிறைவடைந்ததால், விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உயர் கல்வி சேர்க்கைக்கு வசதியாக, இந்த நடவடிக்கை அரசால் எடுக்கப்பட்டது.இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது போல, கல்லுாரி தேர்வுகளும் ரத்து செய்யப்படுமா என்ற, எதிர்பார்ப்பு உருவானது. ஆனால், கல்லுாரிகளில் இறுதியாண்டு கடைசி பருவத் தேர்வை, செப்டம்பருக்குள் நடத்தும்படி, யு.ஜி.சி., என்ற பல்கலை மானியக் குழு உத்தரவிட்டது. இதற்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை, மாநில அரசுகளுக்கு வழங்கும்படி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு, முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதினார். இதற்கிடையில், தமிழகத்தில், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்கள், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்வு நடத்துவது குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. அறிக்கை:
இக்குழு, தொற்று காரணமாக, தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை உள்ளதாக, அரசுக்கு அறிக்கை அளித்தது. அதை ஏற்று, தமிழக அரசு தேர்வை ரத்து செய்துள்ளது.இது தொடர்பாக, முதல்வர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு, கலை மற்றும் அறிவியல் இளங்கலை மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள்; முதுநிலை பட்டப்படிப்பில், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, பருவத் தேர்வில் விலக்கு அளிக்கப்படுகிறது.
அனுமதி:
இளநிலை பொறியியல் படிப்பில், முதல், இரண்டாவது மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் முதுநிலை பொறியியலில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள்; எம்.சி.ஏ., முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும், பருவத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பல்கலை மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு வழிகாட்டுதலின்படி, மதிப்பெண்கள் வழங்கி, இந்த பருவத்திற்கு மட்டும், தேர்வில் இருந்து விலக்கு அளித்து, அடுத்த ஆண்டுக்கு செல்ல அனுமதிக்க உத்தரவிட்டுள்ளேன். இது குறித்து, விரிவான அரசாணை வெளியிட, உயர் கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் மகிழ்ச்சி!
கொரோனா காரணமாக, வீடுகளில் முடங்கியுள்ள கல்லுாரி மாணவ - மாணவியர், பருவத் தேர்வு நடக்குமா, நடக்காதா என தெரியாமல் தவித்து வந்தனர். தற்போது தேர்வு இல்லை என, முதல்வர் அறிவித்தது, அவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பருவம் முழுதும், 'அரியர்ஸ்' இல்லாத நிலை ஏற்பட்டிருப்பது, அனைத்து மாணவர்களிடமும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும், இறுதியாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வு குறித்து, எந்த அறிவிப்பையும் முதல்வர் வெளியிடாததால், ஏமாற்றம் அடைந்துள்ளனர். மற்ற மாணவர்களுக்கு போல, தங்களுக்கும் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர். ராமதாஸ் வரவேற்பு!
'கல்லுாரி இறுதி ஆண்டு கடைசி பருவத் தேர்வுகளை, தமிழக அரசு தன்னிச்சையாக ரத்து செய்து, தேர்ச்சி அளிக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது: கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான இறுதிப் பருவம் தவிர்த்து, மீதமுள்ள அனைத்து பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக, முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது, மாணவர் நலன் காக்கும் செயல். கல்லுாரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது, பா.ம.க.,வுக்கு கிடைத்த வெற்றி. ஆனால், இது மட்டும் போதாது; இறுதி பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும். இறுதி பருவத் தேர்வுகளை ரத்து செய்ய, மத்திய அரசுக்கு, தமிழக முதல்வர் எழுதிய கடிதத்திற்கு, குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் வரவில்லை என்றால், இறுதி பருவத் தேர்வுகளை, தமிழக அரசு தன்னிச்சையாக ரத்து செய்து, தேர்ச்சி அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

B.ed ku exam unda
ReplyDelete