மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டகலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன்கல்வி ஆகிய பாடப்பிரிவுகளுக்கு அரசுப் பள்ளிகளில் 2012ம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டு காலமாக, 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் ரூ.5,000 தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்டு, தற்போது ரூ.7,700 ஊதியம் பெற்று பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வருடத்திற்கு 11 மாதச் சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
2012ம் ஆண்டிற்கான மே மாத ஊதியம் தொடங்கி, 2020ம் ஆண்டு மே மாதம் வரை 9 மாதம் ஊதியத்தை நிலுவையில்லாமல் உடனடியாக வழங்க வேண்டும். மேலும், கடந்த 2017ம் ஆண்டு சட்டசபையில் பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு செய்து நான்காண்டுகள் கடந்த நிலையில் இதுநாள் வரை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை, இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக செயல்படுத்த வேண்டும். இவர்களின் குடும்ப நலனையும், வாழ்வையும் கருத்தில் கொண்டு, இவர்களது பணியை வரைமுறைப்படுத்தி, காலமுறை ஊதியத்தில் பணியமர்த்திட வேண்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சார் பகுதி நேர சிறப்பு பயிற்றுநர்கள் ஒவ்வொரு ஒன்றியத்திலும் 5 பேர்கள் வீதம் மாநிலம் முழுவதும் 2500 பேருக்கு நாங்களும் பணிபுரிந்து வருகிறோம் கடந்த 2002 முதல் தற்காலிக பணியாளர்களாக ஒவ்வொரு ஒன்றியத்திலும் வட்டார வள மையத்தின் சார்பில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான ஆசிரியர் பயிற்றுனர்கள் பணிபுரிந்து வருகிறோம் எங்களையும் இந்த அரசு பணி நிரந்தரம் செய்ய மறுக்கிறது தங்களைப் பற்றியும் ஐயா அவர்கள் இந்த அரசுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு பேர்ணாம்பட்டு ஒன்றியம் சுதர்சன்
ReplyDeleteNiga eillamala sir
ReplyDelete