Breaking

Sunday, July 05, 2020

அரசாணையை விமர்சித்த ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுக்கு, 'மெமோ'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசாணையை விமர்சித்ததாக, ஆசிரியர்கள் சங்கத்தினர் இருவருக்கு, 'மெமோ' கொடுக்கப்பட்டு உள்ளது. 'பள்ளி கல்வி துறையின் செயல்பாடுகளை விமர்சித்து, பேட்டி அளிக்கக்கூடாது' என, இரண்டு வாரங்களுக்கு முன், ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டு இருந்தார்.
பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் சொந்த மாவட்டம், ஈரோடு என்பதால், இந்த தடை விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுதும் ஆசிரியர்களும், சங்க நிர்வாகிகளும் பேட்டி அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து தொடர்பாகவும், 'கிரேடு' முறையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாகவும், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.இதையடுத்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் பேட்ரிக் ரைமண்ட் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், 'மெமோ' அனுப்பியுள்ளார். அரசின் உத்தரவை மீறியும், அரசு பணியாளர் நடத்தை விதிகளை மீறியும் செயல்பட்டதாக கூறி, 15 நாட்களுக்கு விளக்கம் அளிக்க, பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.இந்த நடவடிக்கைக்கு, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog