Search This Blog
Saturday, May 16, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ரூ.20 லட்சம் கோடி திட்டத்தின் 4 ம் கட்ட அறிவிப்புகளை , அறிவித்தார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ; இந்தியாவில் பல்வேறு துறைகளுக்கான கொள்கைகள் எளிமைப்படுத்தப்பட உள்ளன. இந்தியாவை தற்சார்பு பொருளாதாரமாக்குவதன் மிக முக்கியம். அனைத்து துறைகளிலும் வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்பட வேண்டியது அவசியம்.
உலக அளவில் கடினமான போட்டிகளை எதிர்கொள்ள இந்திய தொழில் துறை தயாராக வேண்டியது முக்கியம். முதலீடுகளுக்கான அனுமதியை அதிவிரைவாக வழங்க அரசு செயலர்கள் மட்டத்திலான குழுக்கள் அமைக்கப்படும். விமான போக்குவரத்து துறையில் , முதலீடுகளை அதிகரிக்க கொள்கை அளவில் மாற்றம் செய்யப்படும்.
மின்சார துறையில் முதலீடுகளை ஈர்க்க கொள்கை மாற்றங்கள் செய்யப்படும். நிலக்கரி , கனிமம் மற்றும் பாதுகாப்பு துறையிலும் கொள்கை மாற்றங்கள் கொண்டு வரப்படும்.. விண்வெளித்துறையில் புதிய வாய்ப்புகளை பயன்படுத்தும் வகையில் கொள்கைகள் உருவாக்கப்படும். நிலக்கரி இறக்குமதியை குறைத்து உள்நாட்டிலேயே உற்பத்தியை பெருக்குவதற்கு திட்டங்கள் வகுக்கப்படும்..
நிலக்கரி சுரங்கங்களை இனி யார் வேண்டுமானாலும் ஏலம் எடுத்து பொது சந்தையில் விற்பனை செய்யலாம். நிலக்கரி சுரங்க ஏலத்திற்கு நிபந்தனைகள் எதுவும் கிடையாது. அதிக ஏலம் கேட்பவர்களுக்கு சுரங்கம் ஒதுக்கீடு. உடனியாக 50 நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்தில் விடப்பட உள்ளன. 2023 - 24 க்குள் 1 பில்லியன் டன் நிலக்கரி வெட்டி எடுக்க இலக்கு நிர்ணயம்.
500 கனிம வள சுரங்கங்கள் வெளிப்படையான முறையில் ஏலம் விடப்படும். கனிமம் குத்தகை வழங்கும் போது முத்திரைத் தாள் கட்டணம் குறைப்பு.பகுதி அளவு நிலக்கரி சுரங்கங்கள் இனிமேல் ஏலம் விடப்படும்.
50 நிலக்கரி படுகைகளில் மீத்தேன் வாயு எடுப்பதற்கு ஏலம் விடப்படும். ஆயுத தொழிற்சாலைகள் வாரியம் கார்ப்பரேட் மயமாக்கப்படும்.
ஆயுத உதிரி பாகங்கள் இனி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு , இறக்குமதி செலவு குறைக்கப்படும்.
சில ஆயுதங்கள் இறக்குமதி செய்ய தடை செய்யப்படும். பாதுகாப்பு உற்பத்தி துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு 49 சதவிகிதத்தில் இருந்து 74 சதவிகிதமாக உயர்த்தப்படும். ரூ.1000 கோடி அளவிற்கு விமான போக்குவரத்து பயணச் செலவை குறைக்க நடவடிக்கை.
பயணிகள் விமானத்திற்கு இந்திய வான்பரப்பை பயன்படுத்துவதற்கு உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். ரூ.1000 கோடி அளவிற்கு விமான போக்குவரத்து பயணச் செலவை குறைக்க நடவடிக்கை. விமான நிலைய பராமரிப்பை தனியார் மயமாக்க மேலும் 6 விமான நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்தியாவில் விமான பராமரிப்பு கட்டணம் விரைவில்குறையும். யூனியன் பிரதேசங்களில் மின்விநியோகம் தனியார் மயமாக்கப்படும். சேவையில் குறைபாடு இருந்தால் மின்விநியோக நிறுவனங்களுக்கு இனி அபராதம். விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும். இஸ்ரோவின் வசதிகளை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள்
தங்களின் திறனை , உயர்த்தி கொள்ள அனுமதிக்கப்படும். செயற்கை கோள் தயாரிப்பு மற்றும் ஏவுதலில் தனியார் துறைக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படும். எதிர்கால விண்வெளி திட்டங்களில் தனியார் துறையினர் அனுமதிக்கப்படுவர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
INFORMATION
MINISTER
ரூ.20 லட்சம் கோடி - 4 ம் கட்ட திட்டங்களை அறிவித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்...முழு விபரம்.
ரூ.20 லட்சம் கோடி - 4 ம் கட்ட திட்டங்களை அறிவித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்...முழு விபரம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.