👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களின் பட்டியலை வழங்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வருகின்ற ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை தேர்வு நடைபெறும் நிலையில் கொரோனா பாதித்த மாணவர்கள் விவரம் சேகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர்களின் பட்டியலை கேட்கிறது பள்ளிக் கல்வித்துறை. மாநிலம் முழுவதும் கணக்கெடுக்குமாறு முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு
10-ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா உறுதி
10-ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா உறுதி
சென்னையில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் 3 மருத்துவர்கள், 10-ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,108 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 2,599 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 435 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,946 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் 3 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தை சேர்ந்த 31 வயது ஆண் மருத்துவர், சோழிங்கநல்லூர் சேர்ந்த 35 வயது ஆண் மருத்துவர், கொரட்டூரை சேர்ந்த 45 வயது பெண் மருத்துவருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா உறுதியானாதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.