Breaking

Saturday, May 30, 2020

இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை; ஜூலையில் பொதுத் தேர்வு முடிவுகள்: செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியாகும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.மேலும், தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு என்பது சாத்தியமில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.முன்னதாக நேற்று கோபியில் நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆன்லைன் வகுப்புகள் சம்பந்தமாக எந்தக் குழப்பமும் வேண்டாம். தனியாா் பள்ளிகள் ஆன்லைன் மூலம் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என்றுதான் கூறினேன். தற்போது கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட நேரத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டும்தான் கல்வி கற்றுத் தர முடியும். எனவே ஆன்லைன் மூலம் பாடம் எடுக்க எந்தத் தடையும் இல்லை. மாணவா்கள் எந்தப் பள்ளிகளில் படித்தாா்களோ அந்தப் பள்ளிகளிலேயே தோ்வு எழுதலாம் என்றாா். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog