Breaking

Sunday, July 12, 2026

யோகா மற்றும் இயற்கை மருத்துவம் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை - இணையவழி விண்ணப்பம் நாளை முதல் தொடக்கம்



யோகா மற்றும் இயற்கை மருத்துவம்

பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை

இணையவழி விண்ணப்பம் நாளை முதல் தொடக்கம்

சென்னை, ஜூலை 12: யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மருத்துவ பட் டப்படிப்புக்கான மாண வர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப் பம் நாளை முதல் தொடங் குகிறது.

தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமி யோபதி ஆணையரகம் வெளியிட்ட அறிவிப்பு:

2026-27ம் கல்வியாண் டில் அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு; அரசு ஒதுக் கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங் களுக்கான பி.என்.ஒய்.எஸ். (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டப் படிப்பு சேர்க்கைக்கான இணையவழி விண்ணப் பங்கள் தனித்தனியாகதகு தியுள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

பி.என்.ஒய்.எஸ். பட்டப டிப்புக்கான உரிய தகவல் தொகுப்பேட்டினை, www. tnayushselection.org என்ற வலைதளத்தில் பதிவிறக் கம் செய்துகொள்ளலாம். இணையவழியில் மட்டுமே விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வேறு எந்த வழியிலும் பெறப்படும் விண்ணப்பங் கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

மாணவர் சேர்க் கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவ ரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www. tnayushselection.org என்ற வலைதளத்தில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட் டில் அறியலாம். விண்ணப் பிக்கும்முன் உரிய தகவல் தொகுப்பேட்டினை முழுமையாகப் படித்து சரியான தகவல்களைப் பதிவேற்ற வேண்டும். இணையவழி விண்ணப் பம் பதிவு செய்ய துவங் கும் நாள் 13ம் தேதி(நாளை) முதல். தகவல் தொகுப் பேட்டினைப் பதிவிறக் கம் செய்ய கடைசி நாள் வருகிற 31ம் தேதி மாலை 5 மணி வரை. இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் வருகிற 31ம் தேதி மாலை 5 மணி வரை. அரசு சிறப்பு ஒதுக்கீட் டின்கீழ் விண்ணப்பிக்க இணையவழி விண்ணப் பத்துடன் அனைத்து சுய சான்றொப்பமிட்ட சான் றிதழ்களுடன் தபால், கூரியர் சேவை வாயிலாக சமர்ப்பிக்கவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள் வருகிற 31ம் தேதி மாலை 5 மணி வரை ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



ஆயுஷ்’ படிப்புக்கு நாளை முதல் ஆன்லைன் விண்ணப்பம்: இந்திய மருத்துவம், ஓமியோபதி துறை அறிவிப்பு Online applications for 'AYUSH' courses to open tomorrow: Department of Indian Medicine and Homoeopathy announces.



சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, யோகா - இயற்கை மருத்துவம் ஆகிய ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவம், ஓமியோபதி துறை தெரிவித்துள்ளது.

சித்தா (பிஎஸ்எம்எஸ்), ஆயுர்வேதா (பிஏஎம்எஸ்), யுனானி (பியுஎம்எஸ்), ஓமியோபதி (பிஎச்எம்எஸ்) பட்டப் படிப்புகளுக்கு 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது www.tnayushselection.org என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் நாளை (ஜூலை 13) தொடங்குகிறது. இம்மாதம் 31-ம் தேதி மாலை 5 மணிவரை விண்ணப் பிக்கலாம். நீட்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும்போது, நீட் தேர்வு ஹால் டிக்கெட் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன்மூலம், நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும் மத்திய அரசிடம் இருந்து நீட் மதிப்பெண் பெற்றுக் கொள்ளப்படும்

யோகா - இயற்கை மருத்துவம்: சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகம் மற்றும் செங்கல்பட்டில் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரிகளும், 20 தனியார் கல்லூரிகளும் உள்ளன. ஐந்தரை ஆண்டுகள் கொண்ட இளநிலை யோகா, இயற்கை மருத்துவப் பட்டப் படிப்புக்கும் (பிஎன்ஒய்எஸ்) மேற்கண்ட இணையதளத்தில் நாளை முதல் 31-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு இதற்கு கிடையாது.

சிறப்பு பிரிவினருக்கு.. மேற்கண்ட 5 வகையான ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு சிறப்பு பிரிவில் (மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டு வீரர்) விண்ணப்பிப்பவர்கள் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து,கேட்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களிலும் சுய சான்றொப்பமிட்ட நகல்களை இணைத்து, ஜூலை 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் ‘செயலாளர், தேர்வுக் குழு, இந்திய மருத்துவம், ஓமியோபதி துறை இயக்ககம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106’ என்ற முகவரியில் நேரிலோ, தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். மற்றவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தாலே போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog