CBSE பொதுத்தேர்வுகள் ஜூலை 1ம் தேதி தொடக்கம்: மத்திய அரசு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 09, 2020

Comments:0

CBSE பொதுத்தேர்வுகள் ஜூலை 1ம் தேதி தொடக்கம்: மத்திய அரசு அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சிபிஎஸ்இயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வுகள் ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் இன்னும் 29 வகையான தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் ஆலோசனையின் பேரில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்ட சிபிஎஸ்இ தேர்வுகள் ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்க உள்ளன. இதன்படி 12ம் வகுப்புக்கான தேர்வுகள் ஜூலை மாதம் முதல் இரண்டு வாரத்தில் நடக்கும். அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொறியியல் தேர்வுக்கு முன்னதாக இந்த தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.
ஜூலை மாதம் 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை என்ஐடி நுழைவுத் தேர்வு நடக்க இருக்கிறது. அதற்கு அதற்கு முன்னதாக மீதம் உள்ள சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகளை பொருத்தவரையில் இன்னும் 29 தேர்வுகள் நடக்க வேண்டியுள்ளது. இதுதவிர பிசினஸ் ஸ்டடிஸ், புவியியல், இந்தி, மனையியல், சமூகவியல், பழைய முறை மற்றும் புதிய முறை கணினி அறிவியல், தகவல் தொடர்பு, உயிரி தொழில் நுட்பம் ஆகிய பாடங்களுக்கான முக்கிய பாடங்களாக இருப்பதால் அவற்றை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெஇஇ, நீட் போன்ற தேர்வுகள் ஜூலை மாதமே நடத்தி முடிக்க வேண்டியதுள்ளது. இதையடுத்து ஜெஇஇ சிறப்பு தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடத்த வேண்டியுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டே சிபிஎஸ்சி தேர்வுகளை ஜூலை முதல் இரண்டு வாரத்தில் நடத்தி முடிக்க சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், யுஜிசியின் தேசிய அளவிலான தகுதித் தேர்வு, இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக் கழக நுழைவுத் தேர்வுகளுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews