12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு B.Sc Physics படிக்கலாமா? வருங்காலம் எப்படி இருக்கும்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 21, 2020

Comments:0

12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு B.Sc Physics படிக்கலாமா? வருங்காலம் எப்படி இருக்கும்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
‘நான் பன்னிரண்டாம் முடித்து விட்டு தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறேன். எனக்கு இயற்பியலில் அதிக ஆர்வம் உண்டு. பிஎஸ்சி பிஸிக்ஸ் படிக்க ஆசைப்படுகிறேன். பிஸிக்ஸ் படிப்பதால் வருங்காலம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான வேலைவாய்ப்புகள் உண்டு? இது பற்றி சற்று விரிவாக கூறுங்களேன்’ -சுரேஷ், சென்னை
‘நான் பன்னிரெண்டாம் முடித்து விட்டு தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறேன். எனக்கு இயற்பியலில் அதிக ஆர்வம் உண்டு. பிஎஸ்சி பிஸிக்ஸ் படிக்க ஆசைப்படுகிறேன். பிஸிக்ஸ் படிப்பதால் வருங்காலம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான வேலைவாய்ப்புகள் உண்டு? இது பற்றி சற்று விரிவாக கூறுங்களேன்’ -சுரேஷ், சென்னை
நன்றாக படிக்க வேண்டும்
இயற்பியல் படிப்பதால் எக்கச்சக்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால், நீங்கள் இயற்பியலில் வெறும் டிகிரி படிப்போடு நிறுத்தி விடக்கூடாது. மேற்கொண்டு முதுநிலைப் படிப்புகளும் படிக்க வேண்டும். இன்ஜினியரிங் படித்தால் 4 ஆண்டுகள் படிக்க வேண்டும். அதுவே, டிகிரி என்றால் வெறும் மூன்று ஆண்டுகளும், முதுநிலை டிகிரி என்றால் கூடுதலாக 2 ஆண்டுகளும் படிக்க வேண்டிருக்கும்.
இயற்பியலைப் பொறுத்தவரையில் ஆரம்பத்தில் எளிதாக இருந்தாலும், போக போக இன்ஜினியரிங் படிப்புக்கு ஈடாக கடினம் இருக்கும். அதிக நேரம் செலவழித்து படிக்க வேண்டியிருக்கும். வகுப்புகளை தவிர நூலகங்களில் அதிக நேரம் செலவிட்டு, தொடர்ந்து படிக்க வேண்டும். அப்போது தான் நல்ல மதிப்பெண்களும், இயற்பியலில் நல்ல அறிவும் பெற முடியும்.
முதுநிலைப் படிப்புகள்
அதே போல், பிஎஸ்சி பிஸிக்ஸ் படிக்கும் போது, நானோ டெக்னாலாஜி, நானோ பிஸிக்ஸ், குவாண்டம், எனர்ஜி உள்ளிட்ட பாடங்கள் அடுத்தடுத்து வரும். அதில் சில பாடங்கள் உங்களுக்கு படித்த உடனே புரியும் திறன் இருக்கும். அத்தகைய பாடங்களில் தேர்வு செய்து, அதே துறையில் மேற்படிப்பு படிக்க வேண்டும்.
முதுநிலை இயற்பியல் படிக்கும் போது பல துறைகளில் படிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. M.Sc Physics, M.Sc Applied Physics, M.Sc Nano Technology, Energy Science, GeoPhysics, Medical Physics, Renewable Energy, Bio Physics என பல முதுநிலைப் படிப்புகளும், டிப்ளமோ படிப்புகளும் இருக்கும். அதில் உங்களுக்கு ஏற்றவை தேர்வு செய்து படிக்கலாம்.
​வேலைவாய்ப்புகள்:
இயற்பியல் படித்தவர்களுக்கு அறிவியல் சார்ந்த அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும். இஸ்ரோ, பாபா அணு ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆய்வக நிறுவனங்கள், கல்வித்துறை, மருத்துவத் துறை, தொழிற்சாலைகள், பவர் ஜெனரேட் கம்பெனிகள் என பல நிறுவனங்கள் உள்ளன.
டிகிரி மட்டும் படித்தால் அதற்கு ஏற்றவாறு டெக்னீசியன், டெக்னிக்கல் அசிஸ்டெண்ட், லேப் சூப்ரவைசர் போன்ற வேலைகள் கிடைக்கும். அதுவே, முதுநிலை டிகிரி முடித்தால் ஆராய்ச்சியாளர், ஆராய்ச்சி உதவியாளர், இயற்பியலாளர், மேனேஜர் போன்ற பதவிகளில் அங்கம் வகிக்க முடியும்.
மொழிஅறிவு
மேலும், டிகிரி படிக்கும் போதே தொலைதூர கல்வி, டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, வங்கித்தேர்வுகள், JAM நுழைவுத்தேர்வு போன்ற தேர்வுகளுக்கு படிக்க வேண்டும். கல்லூரியிலும் என்னென்ன வாய்ப்புகள் கிடைக்கிறதோ, அவை அனைத்தையும் பயன்படுத்த வேண்டும்.
கூடுதலாக தட்டச்சு, கம்ப்யூட்டர் படிப்பு, ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிப்படிப்புகள் அவசியம் படிக்க வேண்டும். குறிப்பாக மொழியறிவு மிகமிக அவசியம். எவ்வளவு தான் திறமை இருந்தாலும், மொழி அறிவு இருந்தால் தான் திறமைக்கான மதிப்பு வெளியே தெரியவரும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews