Search This Blog
Thursday, May 21, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'கொரோனா' நோய் காரணமாக, தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் உள்ளவர்கள், கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்: தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு, தனி கழிப்பறையுடன் கூடிய, நல்ல காற்றோட்டமான தனி அறையை ஒதுக்க வேண்டும் வீட்டில் உள்ள அனைவரும், முக கவசம் அணிய வேண்டும் தனிமைப்படுத்தப்பட்ட நபர், எக்காரணம் கொண்டும், வீட்டை விட்டு வெளியில் செல்லக்கூடாது. வீட்டிற்குள் அவருக்கு ஒதுக்கப்பட்ட, அறையிலேயே இருக்க வேண்டும் குறிப்பிட்ட நபர் மட்டுமே, தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு, பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும். பராமரிப்பு பணி செய்பவரும், தவறாமல் முக கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும்.
தனிமைப்படுத்தப் பட்டவர் பயன்படுத்தும் பொருட்களை, மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது உடைகள், படுக்கை விரிப்பு போன்றவற்றை உதறாமல், முக கவசம் மற்றும் கையுறை அணிந்து, தனியாக சோப்பு நீரில் ஊறவைத்து துவைத்து, வெளியில் காய வைக்க வேண்டும் முக கவசம், கையுறை ஆகியவற்றை கழற்றிய பின், கைகளை நன்கு சோப்பு உபயோகித்து, கழுவ வேண்டும் வயதானோர், கர்ப்பிணிகள், குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், தனிமைப்படுத்தப் பட்டவருடன் எவ்வித தொடர்பும் கொள்ளாமல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .
தனிமைப்படுத்தப் பட்டவருக்கு, காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் போன்ற, வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால், 104 அல்லது, 1800 120555550 என்ற எண்ணில், ஆலோசனை பெறலாம். அருகில் உள்ள, அரசு மருத்துவமனையை தொடர்பு கொண்டும், ஆலோசனை பெறலாம் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களையும், அடுத்த, 28 நாட்களுக்கு, தனிமைப்படுத்த வேண்டும். வீட்டை தினமும், மூன்று முறையாவது, கிருமிநாசினியால் துாய்மைப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
தனிமைப்படுத்தப்பட்டோர் கடைப்பிடிக்க வேண்டியவை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.