மாண்புமிகு தமிழக முதல்வருக்கு தமிழக பள்ளிக் கல்வி ஆசிரியர் கூட்டணியின் வேண்டுகோள். A request from the Tamil Nadu School Education Teachers' Federation to the Honourable Chief Minister of Tamil Nadu.
தமிழக பள்ளிக்கல்வி ஆசிரியர் கூட்டணி
U342020 மாநில அமைப்பு
அழவகை நெ 2:46, கன்னி கோயில் தெரு. ஆல்பேட்டை மஞ்சக்குப்பம், கடலூர்-1
மாநிலத்தலைவர்
9443397865
ஜெ.துரை
மாநிலப்பொதுச்செயலாளர்
9994691244
மா. பழனிச்சாமி
மாநிலப்பொருளாமா
7708454400
மாண்புமிகு தமிழக முதல்வருக்கு.
дле: 1001-2026
a letter from the Tamil Nadu School Education Teachers Alliance to the Chief Minister of Tamil Nadu, dated January 10, 2026. The letter requests the resolution of a salary discrepancy for secondary teachers appointed after June 1, 2009, who are protesting for equal pay for equal work.
Sender: Tamil Nadu School Education Teachers Alliance (தமிழக பள்ளிக்கல்வி ஆசிரியர் கூட்டணி)
Recipient: Honourable Chief Minister of Tamil Nadu
Key Demand: Equal pay for equal work for secondary teachers appointed after June 1, 2009
Current Status: Teachers have been protesting for 16 days; the alliance expresses disappointment that a 2021 election promise to address this issue has not been fulfilled தமிழக பள்ளிக் கல்வி ஆசிரியர் கூட்டணியின் வேண்டுகோள்.
1.6.2009க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் சமவேலைக்கு சமளேதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த26.12.2025 முதல் தொடர்ச்சியாக 16 நாட்களாக சென்னையிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் போராடி வருகின்றனர். 1.6.2009க்கு பின் நியமிக்க பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் ஊதியக் குறைப்பு 6வது ஊதியக் குழுவில் இழைக்கப்பட்ட மிகப் பெரிய அநீதியாகும். இந்த அநீதியை ஊதிய முரண்பாட்டை களைய இதற்கு முன் 15 ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் தற்போதுள்ள தி.மு.க. அரசு 2021 தேர்தல் அறிக்கையில் எண்.3116ல் மேற்படி கோரிக்கையை ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தது. ஆசிரியர் அரசு ஊழியர்களின் பெரும் ஆதரவுடன் வெற்றி பெற்று அமைந்த ஆட்சியின் பதவிக்காலம் நிறைவுறும் நிலையில் ஊதிய முரண்பாட்டு கோரிக்கை நிறைவேற்றாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. மேலும் போராடும் இடைநிலை ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை, தாக்குதல் நடவடிக்கையை கைது நடவடிக்கையை காவல் துறை மூலம் எடுப்பதும் கண்டிக்கதக்கது.
இப்போராட்டத்தினால் மாணவர்களின் கல்வி நலன் கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஆசிரியர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கடுமையான மனஉளைச்சளுக்கு ஆளாகின்றனர். தமிழர் திருநாள் நெருங்கும் நிலையில் இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக கவனம் செலுத்தி சமவேலைக்கு சம வாதிய கோரிக்கையை நிறைவேற்றித்தரவும், ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளை கைவிடவும், தமிழக பள்ளி கல்வி ஆசிரியர் கூட்டணி சார்பாக வலியுறுத்தி க் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.