👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அன்மையில் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுககு ஏடிஎம் ரீசார்ஜ் வசதியை அறிமுகம் செய்தது, தற்சமயம் ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு இதேபோன்று வசதியை அறிமுகம் செய்துள்ளது.Airtel Introduced New Recharge Feature
அன்மையில் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுககு ஏடிஎம் ரீசார்ஜ் வசதியை அறிமுகம் செய்தது, தற்சமயம் ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு இதேபோன்று வசதியை அறிமுகம் செய்துள்ளது.
ஏர்டெல் எச்.டி.எஃப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ
ஆனால் ஏர்டெல் நிறுவனம் ஒரு படி மேலே போய் மளிகைக் கடைகள் மற்றும் மருந்தகங்கள் போன்ற கூடுதல் விருப்பங்களுடன் சில வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது, அது என்னவென்றால், இரு வங்கிகளின் ஏடிஎம்களிலும் ரீசார்ஜ் வசதியை செயல்படுத்த ஏர்டெல் எச்.டி.எஃப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
பிக் பஜார் மற்றும் அப்பல்லோ
மேலும் ரீசார்ஜ் வசதிக்காக தொலைத்தொடர்பு நிறுவனம் பிக் பஜார் மற்றும் அப்பல்லோ மருந்தகங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. அதன்படி எச்.டி.எஃப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பயனர்கள் அந்தந்த ஏடிஎம்களில் இருந்து தங்கள் ஏர்டெல் ப்ரீபெய்டு எண்களை ரீசார்ஜ் செய்ய முடியும். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், ஜியோவைப் போலவே இருக்கும்,அங்கு வாடிக்கையாளர் ரீசார்ஜ் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து அவர்களின் மொபைல் எண்ணை உள்ளிடலாம். ரீசார்ஜ் தொகை அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.
ஏடிஎம் ரீசார்ஜ் புதிய
ஏர்டெல் நிறுவனத்தின் வலைத்தளம் அல்லது அதன் மொபைல் பயன்பாடு மூலம் ஆன்லைனில் தங்கள் கட்டணங்களை ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. மேலும் கூகுள் பே, பேடிஎம் மற்றும் பல விருப்பங்களை பயன்படுத்தியும் ரீசார்ஜ்
செய்ய முடியும். ஒருவேளை ஆன்லைன் ரீசார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு இது சாத்தியமான விருப்பமான தேர்வாக உள்ளது ஏர்டெல் கொண்டுவந்துள்ள இந்த ஏடிஎம் ரீசார்ஜ் புதிய வசதி.
80 மில்லியன் ப்ரீபெய்டு
ஏர்டெல் நிறுவனம் ஊரடங்கு மத்தியில் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய வசதி கண்டிப்பாக பலருக்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்கோ தனது குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களில் 80 மில்லியன் ப்ரீபெய்டு பயனர்களுக்கு செல்லுபடியை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.இந்த வாடிக்கையாளர்களின் ப்ரீபெய்டு கணக்குகளில் ரூ.10டாக்டைமையும் இது செலுத்திகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.