👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
உயிர்கொல்லி கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக, நாடு முமுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவர் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
latest tamil news
இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள். 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்..
கொரோனா பிரச்சினையால் பல்வேறு மாநிலங்களில் ஒன்பதாம் வகுப்பு வரை ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டது. சிபிஎஸ்இ பள்ளிகளின் நிலை பற்றி தெரியாமல் இருந்தது. இந்நிலையில் இன்று எட்டாம் வகுப்பு வரை ஆல்பாஸ் என அறிவிக்குமாறு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
மேலும் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பருவத் தேர்வு மற்றும் பயிற்சி தேர்வு போன்றவை அடிப்படையில் தேர்ச்சி என அறிவிப்பு.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.