விம்பிள்டன்
இங்கிலாந்து கிளப், டென்னிஸ் போட்டிகள் ரத்தான செய்தியை தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் பரவி வருவதால் உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளும், விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. விம்பிள்டன் போட்டி ஜூன் 29 முதல் ஜூலை 12-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. இந்த போட்டிக்கான தயாரிப்பு பணிகள் 2 மாதங்களுக்கு முன்னரே தொடங்கப்பட வேண்டும். ஆனால் இப்போதைய சூழலில் எந்த வேலைகளையும் லாக்-டவுன் காரணமாக தொடங்க முடியாமல் உள்ளது.
38 வயதாகும் ரோஜர் பெடரர் மற்றும் செரீனா வில்லியம்ஸ்க்கு இந்த செய்தி நிச்சயம் அதிர்ச்சியாகவே அமையும். டென்னிஸ் சாம்பியன்களான இவர்கள், கடந்த ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிச் சென்றனர். விம்பிள்டனில் விளையாட இவர்களுக்கு இன்னும் அதிக ஆண்டுகள் வாய்ப்புகள் இருக்காது என்பதால், இந்த ஆண்டு போட்டி ரத்தானது மிகப்பெரிய பின்னடைவு தான். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு செரீனா வில்லியம்ஸ், நான் மிகவும் ஷாக் ஆகியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார். அதேபோல 8 முறை விம்பிள்டன் பட்டம் வென்று அசத்தியுள்ள பெடரர், பேரழிவு என கருத்து தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.