Breaking

Tuesday, April 07, 2020

மாண்புமிகு முதலமைச்சர் திரு.எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் செய்தி அறிக்கை - நாள் 07.04.2020 - PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா தடுப்பு பணிக்காக அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் நிதியில் தலா ரூ.1 கோடி பிடித்தம் செய்து மாநில அளவில் பயன்படுத்தி கொள்ள முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு பணிக்காக அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி, தனது தொகுதி நிதியில் இருந்து அளித்த நிதியை தமிழக அரசு புறக்கணித்துவிட்டதாக, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்து முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை: எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.1 கோடி பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை ஒருங்கிணைந்து மாநில அளவில் பயன்படுத்தப்படும். மாவட்ட, மாநில அளவில் மருத்துவ உபகரணம், மருந்து வாங்கவும், தடுப்பு நடவடிக்கைக்கும் பணம் பயன்படுத்தி கொள்ளப்படும். தொகுதி மேம்பாட்டு நிதி விதிமுறைப்படி சப்பந்தப்பட்ட பகுதிகளில் தான் நிதியை பயன்படுத்த முடியும். எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரைப்படி வரையறுக்கப்பட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். இதை அறியாமல், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், வழிமுறைகளின்படி செயல்பட்டதை குறை சொல்கிறார். சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ., நினைத்தால், தங்களது தொகுதிக்கு ரூ.25 லட்சம் கூடுதலாக பயன்படுத்த முடியும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.
CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog