👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உலக அளவில் தொடர்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், கடந்த சில நாட்களாக இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோதி ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு சமூக இடைவெளியை கடைப்பிடித்து 9 நிமிடங்கள் டார்ச், அகல்விளக்கு அல்லது செல்போன் ஒளியை ஒளிர விட சொன்னார்.
இதற்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் பலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக மோதியின் அறிவிப்பைப் பாராட்டுவோர் இதன் பின்னால் அறிவியல் காரணங்கள் உள்ளதாகச் சிலாகிக்கிறார்கள்.
9 கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும் என்று சிலரும், 9 நிமிடங்கள் விளக்குகளை ஒளிரச் செய்வதன் மூலம் பூமியின் வெப்பநிலை உயரும் அதனால் கொரோனா உயிரிழக்கும் என்று சிலரும், ஏப்ரல் 9-ம் தேதி நிலவு ஒளியும் செல்போன் டார்ச் ஒளியும் இணைவதால் ஏற்படும் கதிர்களால் கொரோனா உயிரிழக்கும் என்று சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பான பதிவுகளை இணையத்தில் பதிவேற்றி வருகிறார்கள்.
இப்படியான சூழலில் இதனை மறுத்துள்ளது மத்திய அரசு.
இந்திய அரசின் தகவல் தொடர்பு துறையின் ட்விட்டர் கணக்கில், "யாரும் அறிவியல்பூர்வமற்ற தகவல்களைப் பகிர வேண்டாம். நம் ஒற்றுமையை வெளிக்காட்டவே விளக்கு ஏற்றும் செயல்," என குறிப்பிட்டுள்ளனர்.
"கொரோனாவுக்கு எதிரான ஒருங்கிணைந்த போராட்டத்தின் மன உறுதியையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் ஒரு செயல்பாடுதான் இது. தயவுசெய்து சமுக இடைவெளியைப் பின்பற்றுங்கள்," என்றும் தெரிவித்துள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.