ITI, +2 முடித்தவர்களுக்கு நிலக்கரி நிறுவனத்தில் வேலை. ஒரு நாளைக்கு ரூ.1034 சம்பளம்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 17, 2020

Comments:0

ITI, +2 முடித்தவர்களுக்கு நிலக்கரி நிறுவனத்தில் வேலை. ஒரு நாளைக்கு ரூ.1034 சம்பளம்!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வடக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனமான நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள கணக்காளர், இளநிலை வேதியியல் நிபுணர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 93 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு டிப்ளமோ, சி.ஏ துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : வடக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 93
பணி மற்றும் காலிப் பணியிட விவரம்:
Accountant/ Cost Accountant - 41
கல்வித் தகுதி : சிஏ, ஐசிடபுள்யுஏ முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.37,063
Oversear Grade-C - 35
கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.31,852
Amin.Grade-D - 10
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Amanat, Surveyorship சான்றிதழ் படிப்பை முடித்து குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.29,460
Junior Chemist T&S Grade-D - 07
கல்வித் தகுதி : வேதியியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.29,460
வயது வரம்பு : 30.03.2020 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிடப்பட்டள்ள பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nclcil.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. இதர பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணமாக ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nclcil.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews