Search This Blog
Monday, March 02, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகம் முழுவதும், 8.35 லட்சம் பேர் எழுதும், பிளஸ் 2 பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது.தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வுநடத்தப்படுகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, இன்று தமிழகம்முழுவதும் துவங்குகிறது. காலை, 10:00 மணி முதல், பகல், 1:15 மணி வரை தேர்வு நடைபெறும். பிளஸ் 2 தேர்வை, தமிழகம், புதுச்சேரியில், 7,276 மேல்நிலை பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் என, 8.35 லட்சம் பேர் எழுதுகின்றனர். பழைய பாடத் திட்டத்தில், 10ஆயிரத்து, 683 பேர் தேர்வு எழுதுகின்றனர். மொத்தமாக, 4.41 லட்சம் மாணவியர் மற்றும் இரண்டு திருநங்கையர் தேர்வு எழுத உள்ளனர்.
தமிழ் வழியில், 4.54 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.அறிவியல் பிரிவில், 4.65 லட்சம்; வணிகவியலில், 2.79 லட்சம்; கலை பாட பிரிவில், 15 ஆயிரம் மற்றும் தொழிற்கல்வி பிரிவில், 56 ஆயிரம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுஉள்ளனர்.சென்னையில், 410 பள்ளிகளில் இருந்து, 47 ஆயிரத்து, 264பேர், 160 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். மாநிலம் முழுவதும், 3,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வை முறைகேடின்றி நேர்மையாக நடத்தவும், மாணவர்கள் காப்பியடிப்பதைத் தடுக்கவும், 20 ஆயிரம் ஆசிரியர்கள் அடங்கிய, 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்வறை கண்காணிப்பு பணியில், 41 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுஉள்ளனர். மாணவர்கள், ஹால் டிக்கெட், பேனா, பென்சில் மற்றும் கணித, அறிவியல் உபகரணங்கள் உள்ளிட்டவற்றை மட்டும், தேர்வறைக்கு எடுத்துச் செல்லலாம். மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு பொருட்கள், துண்டு காகிதங்கள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்லக் கூடாது என, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
விடைத்தாள் திருத்தம் எப்போது?
பிளஸ் 2 பொது தேர்வு இன்று துவங்கும் நிலையில், விடைத்தாள் திருத்தத்துக்கான கால அட்டவணையை, அரசு தேர்வு துறை, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பியுள்ளது.
அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் மார்ச், 31 முதல் விடைத்தாள் திருத்தம் துவங்குகிறது. மொழிப்பாடங்கள் மற்றும் முக்கிய பாடங்கள் என அனைத்துக்கும், ஒரே நேரத்தில் விடைத்தாள் திருத்தம் நடைபெறும்.
தமிழகத்தில் நடப்பாண்டிற்கான பிளஸ்-2 தேர்வு நாளை துவங்குகிறது. இத்தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7,276 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8,16,359 மாணவர்கள் எழுதுகின்றனர். இதையொட்டி தேர்வறையில் ஆசிரியர்கள் செல்போன் வைத்திருக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. 2019-2020ம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் நாளை (02.03.2020) தொடங்கி 24.03.2020 வரை நடைபெறவுள்ளது. காலை 10.00 மணி முதல் மதியம் 01.15 மணி வரை இத்தேர்வு நடக்கிறது. இத்தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7,276 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8,16,359 மாணவர்கள் எழுதுகின்றனர்.
இதில் 19,166 தனித்தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர். பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தத்தில் 8,35,525 பேர் தேர்வெழுத உள்ளனர். இதில் மாணவியர் 4,41,612; மாணவர்கள் 3,74,747 ஆகும். 66,865 மாணவிகள், மாணவர்களைவிட கூடுதலாக தேர்வெழுதுகின்றனர். 3012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 68 புதிய தேர்வுமையங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளிலுள்ள 62 ஆண் சிறைவாசிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுதவுள்ளனர்.
சுமார் 41,500 ஆசிரியர்கள் அறைக் கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாற்றுத் திறனாளி தேர்வர்கள் 3,330 பேர் எழுதுகின்றனர். இதையொட்டி அனைத்துத் தேர்வு மையங்களுக்கும் தேவையான எண்ணிக்கையில் முதன்மை விடைத்தாள், கூடுதல் விடைத்தாட்கள் மற்றும் முகப்புச் சீட்டுகள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன. இத்தேர்விற்காக 296 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அவ்விடங்களில் 24 மணி நேரஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 4000 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர், கண்காணிப்புக் குழுவை அழைத்துக் கொண்டு தேர்வு மையங்களைப் பார்வையிட்டு முறைகேடுகள் ஏதுவும் நடைபெறாவண்ணம் தீவிரமாகக் கண்காணித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தேர்வறையில் தங்களுடன் அலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு 4ம் தேதி துவங்குகிறது. மொத்தம் 7400 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8,26,119 மாணவர்கள் மற்றும் 6,356 தனித்தேர்வர்கள் என மொத்தத்தில் 8,32,475 பேர் புதிய பாடத்திட்டத்தில் தேர்வெழுத உள்ளனர். 100 சிறைவாசிகளும் எழுதுகின்றனர். 10ம் வகுப்பு தேர்வு 27ம் தேதி துவங்குகிறது. மொத்தம் 12,687 பள்ளிகளிலிருந்து 9,45,006 மாணவர்கள் மற்றும் 10,742 தனித்தேர்வர்கள் என மொத்தத்தில் 9,55,748 பேர் புதிய பாடத்திட்டத்தில் தேர்வெழுத உள்ளனர். 144 சிறைவாசிகளும் எழுதுகின்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவக்கம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.