👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5,8ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அமைச்சர் வீட்டை தமிழ் பேரவை அமைப்பினர் முற்றுகையிடப்போவதாக அறிவித்த நிலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி கோபியில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வீட்டை முற்றுகையிட வந்த ஆதி தமிழர் பேரவை அமைப்பினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள அமைச்சர் செங்கோட்டையன் வீட்டை முற்றுகையிட முயன்ற ஆதி தமிழர் பேரவை அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட வந்தவர்கள் பேருந்து நிலையத்தின் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஆதி தமிழர் பேரவை அமைப்பு தலைவர் அதியமான் உள்ளிட்ட 200 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வு உடனடியாக ரத்து செய்யவில்லை எனில் தொடர் போராட்டத்த்தில் ஈடுப்படப்போவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.