குழந்தைகளின் கிறுக்கல்களை படம் பிடித்தால் பாட்டுப் பாடும் புதிய செயலி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 21, 2020

Comments:0

குழந்தைகளின் கிறுக்கல்களை படம் பிடித்தால் பாட்டுப் பாடும் புதிய செயலி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
CLICK HERE TO WATCH THE VIDEO குழந்தைகளின் கிறுக்கல்களை படம் பிடித்தால் பாட்டுப் பாடும் புதிய செயலி. சென்னை புத்தகக் காட்சியில் இடம்பெற்றுள்ளது. பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றுள்ள செயலி குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. வீட்டின் சுவர்களில் குழந்தைகள் கிறுக்கும்போது, பெற்றோர்கள் அவர்களைக் கண்டிப்பது வழக்கமான ஒன்று. இவ்வாறு செய்வதால் இளம் பருவத்திலேயே குழந்தைகளின் கற்றல்திறன் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
CLICK HERE TO WATCH THE VIDEO வீடுகளுக்கும் பாதிப்பின்றி, குழந்தைகளுக்கும் பெரிதும் பயன்படும் செயலி ஒன்று சென்னை நந்தனம் புத்தக கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இங்மியோ என்ற அரங்கில் வைக்கப்பட்ட augment reality தொழில்நுட்பத்தில் உருவான இங்மியோ(inkmeo) செயலி தான் அது. குழந்தைகள் சுவரில் வரைவதற்கு சுலபமாக மறுசுழற்சி முறையில் பயன்படுத்தக் கூடிய காகிதத்தில் சிறு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதனை சுவற்றில் ஒட்டிய பின்னர் குழந்தைகள் இதில் கலர் பென்சில் மற்றும் கிரையான் மூலம் எத்தனை முறை வேண்டுமானாலும் வண்ணம் தீட்டவும், பின்னர் ஈரத் துணி மூலம் எளிதில் அழிக்கவும் முடியும்.
CLICK HERE TO WATCH THE VIDEO ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்த இங்மியோ செயலியின் மூலம், சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள மறுசுழற்சி காகிதத்தில் உள்ள ஓவியத்தை படம் பிடித்தால் அதற்கான பாடலை வீடியோவுடன் போனில் பார்க்க முடியும். வெறும் சுவற்றில் கிறுக்கும் குழந்தையுடன் வரையவும் விளையாடவும் பெற்றோர்களுக்கு இது உதவதாக அமைந்துள்ளது. பெரும்பாலான குழந்தைகள் வீட்டின் சுவர்களிலேயே முதலில் எழுதி பழகுகின்றன. சுவற்றில் கிறுக்குவதன் மூலம் கற்பிக்கும் முயற்சியாக உருவாக்கப்பட்டதே இங்மியோ. இந்த செயலி மூலம் பழங்களின் பெயர், விலங்குகளின் பெயர் உள்ளிட்ட 35 வகையான செயல்பட்டு கற்பித்தலை குழந்தைகளுக்கு பயிற்றுவிக்க முடியும் என்கிறார் இங்மியோ நிறுவனர் சதீஷ் குப்தா குழந்தையின் கற்றல் திறனை ஊக்கப்படுத்தும் கண்டுபிடிப்புகள் நிறைய வரவேண்டும் என்பதே பெற்றோர்களின் விருப்பமாக உள்ளது. CLICK HERE TO WATCH THE VIDEO
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews