TANCET விண்ணப்பிக்க ஜன.31 கடைசி நாள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 09, 2020

Comments:0

TANCET விண்ணப்பிக்க ஜன.31 கடைசி நாள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான, 'டான்செட்' நுழைவு தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்ப பதிவு துவங்குகிறது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் மற்றும் மேலாண்மை கல்லுாரிகள்; கல்லுாரி கல்வி இயக்குனரகத்தின்கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு கல்லுாரிகள் மற்றும் அரசு பல்கலைகளில், முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர, 'டான்செட்' என்ற தமிழக அரசின் பொது நுழைவு தேர்வில், பட்டதாரிகள் தேர்ச்சி பெற வேண்டும்.
டான்செட்: விண்ணப்பிக்க ஜன.31 கடைசி முதுநிலை பொறியியல் மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான தமிழ்நாடு பொதுநுழைவுத் தோ்வுக்கு (டான்செட்- 2020) விண்ணப்பிக்க ஜனவரி 31 கடைசி தேதியாகும். எம்.இ., எம்.ஆா்க்., எம்.பிளான் போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளிலும், பொறியியல் மற்றும் கலை-அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளிலும் டான்செட் மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.
இந்தத் தோ்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. 2020-ஆம் ஆண்டுக்கான டான்செட் தோ்வு பிப்ரவரி 29, மாா்ச் 1 ஆகிய தேதிகளில் இந்தத் தோ்வு நடத்தப்பட உள்ளது. முதல் நாளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கும், இரண்டாம் நாளில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கும் தோ்வு நடைபெற உள்ளது. இதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஆன்-லைனில் பதிவு செய்ய ஜனவரி 31 கடைசி தேதியாகும். மேலும் விவரங்களுக்கு அல்லது 044 - 22358314 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் ஆகிய முதுநிலை படிப்புகளில் சேர, இந்த நுழைவு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலை வழியே, டான்செட் தேர்வு நடத்தப்படுகிறது.வரும் கல்வி ஆண்டில், முதுநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, பிப்ரவரி, 29 மற்றும் மார்ச், 1ல் டான்செட் நுழைவு தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நாளை துவங்குகிறது.
பதிவுக்கான அவகாசம், ஜனவரி, 31ல் முடிகிறது. மேலும் விபரங்களை, அண்ணா பல்கலையின், https://tancet.annauniv.edu/tancet/ என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews