👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவ கல்லுாரிகளில் சேர்வதற்கும், 'நீட்' தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
மருத்துவ இளநிலை படிப்புகளான, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் மாணவர்கள் சேர, நாடு முழுவதும், நீட் நுழைவு தேர்வு நடத்தப் படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் பட்டியல், தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்படும். அதன்படி, மத்திய அரசின் ஒதுக்கீட்டிலும், மாநிலங்களின் ஒதுக்கீட்டிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.இந்த கல்வி ஆண்டில், பிளஸ் 2 மாணவர்கள் எழுத வேண்டிய நீட் நுழைவு தேர்வு, மே, 3ல் நடக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இரு தினங்களுக்கு முன் வெளியானது. தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவுகள், கடந்த, 2ல் துவங்கியுள்ளன. இந்த மாதம், 31ம் தேதிக்குள், ஆன்லைன் பதிவுகளை மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டு முதல், எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்லுாரிகளில், மருத்துவ படிப்புகளில் சேர விரும்புவோரும், நீட் தேர்வை எழுத வேண்டும். தனியாக எய்ம்ஸ் நிறுவனத்துக்கோ அல்லது ஜிப்மருக்கோ நுழைவு தேர்வு நடத்தப்படாது என, தேர்வு முகமை அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதாவது, எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு, தனித்தனியே நுழைவு தேர்வை எழுத வேண்டிய நிலை இருந்தது. மேலும், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் சேர, நீட் தேர்வும் எழுத வேண்டும் என்ற நிலை இருந்தது. தற்போது, இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.