👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
நீட் போன்ற தேர்வுகளை எதிர்கொள்ள தமிழக பிளஸ் 2 பாடத்திட்டமே போதும் என செய்யாறில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பைங்கினர் பகுதியில் மினி ஸ்டேடியம் அமைக்கும் பணியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பழங்கால விளையாட்டுக்களான சிலம்பம், கபடி போன்ற விளையாட்டுகளை தொடர்ந்து ஆர்வப்படுத்தி வருகிறோம். கபடி, வாலிபால், கிரிக்கெட் போட்டிகளுக்கு அரசு முன்னுரிமை கொடுத்து முழு பயிற்சி அளித்து வருகிறது.
மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து, ஆரோக்கியத்திற்கான வழிகாட்டுதலாக விளையாட்டு திறனை அரசு மேம்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 பாடதிட்டங்களை முழுமையாக படித்தாலே போதும், நீட் தேர்வு மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் எந்த போட்டி தேர்வுகளிலும் எளிதாக வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்கள் விளையாடுவதை பெற்றோர்கள் விரும்புவது இல்லை என பள்ளிகல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
CLICK HERE TO WATCH THE VIDEOமாணவர்கள் விளையாடுவதை பெற்றோர்கள் விரும்புவது இல்லை என பள்ளிகல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் ஆங்கில வழிகாட்டி புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், மாணவர்கள் முழுநேரமும் படித்து அதிக மதிப்பெண்களை பெற பெற்றோர்கள் விரும்புவதாக கூறினார். மேலும், பள்ளிகளை சுத்தப்படுத்த நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.