👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில், ஆங்கில உரையாடலை வளர்க்க பள்ளிக்குள்ளேயே வணிக வளாகம் அமைத்து, பொருட்களை ஆங்கிலத்தில் கூறி விற்பனை செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் காளாச்சேரி மேற்கில், அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. அங்கு படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்கள், பள்ளிக்குள்ளேயே வணிக வளாகம் போன்று அமைத்து அதில் பல்வேறு விதமான கடைகளை உருவாக்கியிருந்தனர்.
குறிப்பாக காய்கறிக் கடை, துணிக் கடை, பொம்மைக் கடை, பழக்கடை, இனிப்புப் பலகாரக் கடை, மருந்துக் கடை மற்றும் எழுதுபொருள் விற்பனைக் கடை போன்றவற்றை அமைத்து ஆங்கிலத்தில் அப்பொருள்களைப் பற்றிய விளக்கங்களைக் கூறி விற்பனை செய்தனர்.
இதில் மாணவர்கள் விற்பனையாளர்களாகவும் ஆசிரியர்கள், மற்ற வகுப்பு மாணவர்கள், பெற்றோர்கள் நுகர்வோர்களாகவும் மாறி மாணவர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடினர்.

இதுகுறித்துப் பேசிய ஆங்கில ஆசிரியரும் அன்பாசிரியருமான ஆனந்த், ''அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கு கொண்டு, இந்த செயல்பாட்டைச் சிறப்பாகச் செய்தனர். பொம்மைக் கடை, எழுதுபொருள் விற்பனைக் கடை மற்றும் பழக்கடை நடத்திய மாணவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். பங்கேற்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக அனைத்து மாணவர்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவர்களுக்கு விளையாட்டு முறையில் ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. தினசரி நடவடிக்கைகளையே ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுப்பதால் மாணவர்களால், எளிதில் ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டு சரளமாகப் பேச முடிகிறது'' என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.