உலகின் மிகச்சிறிய கேமரா சென்சார்! மண்துகளை விட சிறியது.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 03, 2019

Comments:0

உலகின் மிகச்சிறிய கேமரா சென்சார்! மண்துகளை விட சிறியது..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஸ்மார்ட்போன் கேமராக்கள் டி.எஸ்.எல்.ஆர் கேமராக்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் அளவிற்கு, இன்றைய ஸ்மார்ட்போன்கள் நாட்கள் செல்ல செல்ல தங்கள் கேமரா செயல்திறனில் எவ்வாறு புதுமைகளை உருவாக்கிவருகின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம். இப்போது ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிகச்சிறிய கேமராவை உருவாக்கியுள்ளனர். ஒரு மண் துகள் அளவிற்கு சிறியதான இதன்மூலம், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு புகைபடங்களையும் க்களையும் எடுக்க முடியும். கலிபோர்னியாவைச் சேர்ந்த ஆம்னிவிஷன் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த கேமரா, வெறும் 0.575 x 0.575 x 0.232 மிமீ அளவு கொண்டது. 'வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய மிகச்சிறிய புகைப்பட சென்சார்' என்ற கின்னஸ் உலக சாதனையும் இந்த கேமராவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சென்சார் RGB பேயர் சிப்பின் உதவியுடன் 40,000 பிக்சல் வண்ண படத்தை எடுக்கும் திறன் கொண்டது. 1/36-இன்ச் ஆப்டிகல் வடிவமைப்பைக் கொண்டுள்ள இதன்மூலம், 30fps மற்றும் 200x200 பிக்சல் ரெசல்யூசன் கொண்ட க்களை எடுக்கமுடியும்.
இந்த சென்சார் சிறியதாக இருந்தாலும், தீவிர குறைந்த ஒளியில் செயல்படும் செயல்திறனைக் கொண்டுள்ளது. 30 மிமீ வரை புல வரம்பின் ஆழத்துடன் 120 டிகிரி அகல-கோண படங்களை கைப்பற்றும் திறன் இந்த சென்சாருக்கு உள்ளது. இந்நிறுவனத்தின் கூற்றுப்படி, பின்புற வெளிச்சத்தை ஆதரிக்கும் ஒரே மிகச்சிறிய சிறிய சிப்-ஆன்-சிப் கேமரா இது ஆகும். உலகின் மிகச்சிறிய கேமராவின் பயன்கள் இவ்வளவு சிறிய கேமரா எங்கு உதவியாக இருக்கும் என்று இப்போது நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கலாம். முதலாவதாக இந்த கேமரா எண்டோஸ்கோபி மற்றும் வடிகுழாய்கள் போன்ற மருத்துவ செயல்முறைகளில் புரட்சியை ஏற்படுத்தக்கூடும் வகையில் அவை இப்போது சிறியதாக மாற்றப்படலாம். இதனால் நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்கும் சவுரியமான அனுபவத்தை வழங்க முடியும். உளவு உபகரணங்கள், அணியக்கூடிய பொருட்கள் போன்ற பிற துறைகளிலும் இந்த கேமராவை பயன்படுத்தலாம் என்றும் ஆம்னிவிஷன் கூறுகிறது.
இந்நிறுவனத்தின் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள படி, "இந்த சென்சாரின் குறைந்த மின் நுகர்வு காரணமாக, எண்டோஸ்கோப்பின் தொலை முனையில் குறைந்த அளவு வெப்பமே உருவாவதால், நோயாளியின் சவுகரியத்தை மேம்படுத்துவதுடன், நீண்ட கால சிகிச்சைகளுக்கும் வழிவகுக்கிறது. 4- பின் இடைமுகம் மற்றும் அனலாக் தரவு வெளியீடு, குறைந்தபட்ச சமிக்ஞை சத்தத்துடன் 4 மீட்டர் வரை தரவு பரிமாற்ற திறன் கொண்ட இந்த சென்சார் எளிதான ஒருங்கிணைப்பை செயல்படுத்துகிறது. பலர் கேமராக்களை சிறியதாக மாற்ற முயற்சிக்கின்றனர். சமீபத்தில் உட்டா பல்கலைக்கழகத்தின் பொறியாளர்கள் மிகவும் மெல்லிய கேமரா லென்ஸை (மனித முடியை விட மெல்லியதாக) உருவாக்கினர். இதில் வழக்கமான வளைந்த லென்ஸ்களுக்கு மாற்றாக கண்ணாடி தட்டையாக இருந்தது. ஒரு வழக்கமான லென்ஸில், ஒளியானது பொருளை கைப்பற்றி சென்சாரை அடையும் முன் வளைகிறது. ஆனால் இந்த புதிய லென்ஸில் மைக்ரோ ஸ்ட்ரக்சர்கள் உள்ளதால், அவை சென்சாரில் நேரடியாக ஒளியை வளைக்கின்றன.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews