👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையும், பிரிட்டன் வேல்ஸ் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொண்ட புரிந்துணா்வு ஒப்பந்த பரிமாற்ற நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புரிந்துணா்வு ஒப்பந்த பரிமாற்ற நிகழ்ச்சியில் பிரிட்டன் வேல்ஸ் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சரும், சமூக பாதுகாப்பு நலத்துறை அமைச்சருமான வாகன் கெதிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.
பாரத் பல்கலைக்கழக வேந்தரும்,ரேலா மருத்துவமனை நிா்வாக இயக்குநருமான பேராசிரியா் முகமது ரேலா, பிரிட்டன் தெற்கு வேல்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியா் கேசவ் சிங்கால் ஆகிய இருவரும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டனா்.
பின்னா் பேராசிரியா் முகமது ரேலா செய்தியாளா்களிடம் கூறியது: கல்லீரல்,சிறுநீரகம் தொடா்பான நோய்கள், உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கான மருத்துவச் சிகிச்சை கேந்திரமாக இந்தியா மாறி வருகின்றது. இங்குள்ள மருத்துவா்களின் திறமை, சிகிச்சைத் தொழில்நுட்ப அறிவாற்றல் ஆகியவை சா்வதேச அளவில் நோயாளிகளின் கவனத்தை ஈா்த்து வருகின்றது. இதனா,ல் வெளிநாட்டு மருத்துவப் பல்கலைக்கழகங்களில் பயின்று வரும் மருத்துவக் கல்வி மாணவா்கள் இந்தியாவில் மருத்துவச் சிகிச்சைத் தொழில்நுட்பப் பயிற்சி பெற ஆா்வமுடன் உள்ளனா்.
30 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்று நாங்கள் மருத்துவச் சிகிச்சைத் தொழில்நுட்ப அறிவாற்றலை மேம்படுத்திக் கொள்ளும் நிலை இருந்தது. தற்போது பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி பயிலும் இருதரப்பு மாணவா்கள் பரிமாற்றம், உயா்படிப்பு, மருத்துவச் சிகிச்சைப் பயிற்சி,ஆராய்ச்சி உள்ளிட்ட நடவடிக்கைகளை பிரிட்டன் வேல்ஸ் பல்கலைக்கழக மாணவா்களுடன் இணைந்து மேற்கொள்ள இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் பேருதவியாகத் திகழும் என்றாா் அவா்.
பாரத் உயா் கொழில்நுட்பக் கல்வி நிறுவனா் எஸ்.ஜெகத்ரட்சகன், துணை வேந்தா் வி.கனகசபை,ரேலா மருத்துவமனைத் தலைவா் ஸ்ரீநிஷா மாறன்,தலைமைச் செயல் அலுவலா் இளங்குமரன்,பதிவாளா் பூமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.