👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நோபல் பரிசு பெற்ற இந்தியரான, அபிஜித் பானர்ஜியுடன் இணைந்து, பள்ளிக் கல்வியை மேம்படுத்த, தெலுங்கானா மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், அரசு பள்ளிகளில் மாணவ - மாணவியர் எண்ணிக்கை, பெரும் அளவில் குறைந்து வருவதாக, சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்தது. கிராமப் பகுதிகளில் உள்ள, 916 பள்ளிகளில், ஒரு மாணவர் கூட இல்லாத நிலை உருவாகி உள்ளது. 100க்கும் மேற்பட்ட பள்ளிகளில், 50க்கும் குறைவான மாணவர்களே படிக்கின்றனர். இதனால், அரசுப் பள்ளிகள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன.
மாணவர்களின் கற்றல் அறிவும் சிறப்பாக இல்லை என, ஆய்வில் தெரிய வந்தது.இந்த நிலைமையை சீர் செய்ய, தெலுங்கானா அரசு முடிவு செய்தது. இதையடுத்து, பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற இந்தியரான, அபிஜித் பானர்ஜியுடன் இணைந்து, பள்ளி கல்வியை மேம்படுத்தும் திட்டத்தை, தெலுங்கானா அரசு வகுத்துள்ளது.இதற்காக, அபிஜித்தின் ஜே.பி.ஏ.எல்., எனப்படும், அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை ஒழிப்பு ஆய்வகத்துடன், ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.
அ மெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின், பொருளாதார பேராசிரியர் கார்த்திக் முரளிதரன் மேற்பார்வையில், இந்த கல்வி திட்டம் செயல்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஒடிசா மாநிலத்தில், வறுமை ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள, அபிஜித் பானர்ஜியின் ஜே.பி.ஏ.எல்., நிறுவனத்துடன், அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.