👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அண்ணாமலை பல்கலையில் உபரியாக உள்ள, 44 பேராசிரியர்களை, மற்றபல்கலைகளுக்கு இடமாற்றம் செய்து, தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. அண்ணாமலை பல்கலையில் நிகழ்ந்த நிர்வாக குளறுபடிகளால், அந்த பல்கலை கடும் நஷ்டத்தை சந்தித்தது. இதையடுத்து, மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட, அண்ணாமலை பல்கலையை அரசுடைமையாக்கி, 2013ல் அரசு உத்தரவு பிறப்பித்தது.
அதன்பின், அண்ணாமலை பல்கலையில் தேவைக்கு அதிகமாக இருந்த, 60 பேராசிரியர்கள், வேறு பல்கலைகளின் பணிகளுக்கு இடமாறுதல் செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்னும் நஷ்டத்தில் இயங்கும் பல்கலையின் நிர்வாகத்தை சமாளிக்க, களையெடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, தேவைக்கு அதிகமாக உள்ள, 37 உதவி பேராசிரியர்கள் மற்றும், ஏழு இணை பேராசிரியர்களை இடமாற்றம் செய்து, தமிழக உயர்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலை, மதுரை காமராஜ் பல்கலை, திருவள்ளுவர் பல்கலை உட்பட, 10 பல்கலைகளில் காலியாக உள்ள இடங்களில், அண்ணாமலை பல்கலை பேராசிரியர்களை நியமிக்க, உயர்கல்வி துறையும், நிதித்துறையும் அனுமதி அளித்துள்ளன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.