👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசுப் பணியாளர்கள் தங்களது பணிப் பதிவேடு பதிவுகளை செல்லிடப்பேசி செயலி மூலம் சரிபார்த்து திருத்தம் மேற்கொள்ளலாம் என்று அரசு முதன்மைச் செயலர் மற்றும் கருவூல கணக்குத் துறை ஆணையர் சு.ஜவஹர் தெரிவித்தார்.
தேனி, என்.ஆர்.டி. மக்கள் மன்ற அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியது:
மாநிலத்தின் நிதி மேலாண்மை மற்றும் மனித வள மேலாண்மையை ஒருங்கிணைத்து அரசு நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக இத் திட்டம் செயல்படுகிறது. இத் திட்டத்தின் மூலம் அரசின் நிதி நிர்வாகம் மற்றும் வரவு, செலவு குறித்த விவரங்களை உடனுக்குடன் துல்லியமாகத் தெரிந்து கொள்ளலாம்.

மாநில கணக்காயர் அலுவலகம், வருமான வரித் துறை, ரிசர்வ் வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் அனைத்து அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து இத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் அரசுத் துறைகளில் பணியாளர்களுக்கு ஒரே நாளில் சம்பளப் பட்டியல் தயாரித்து, இணையம் மூலம் கருவூலத்தில் சமர்ப்பித்து, சம்பந்தப்பட்ட பணியாளரின் வங்கிக் கணக்கில் சம்பளத் தொகையை வரவு வைக்க முடியும்.
மேலும், அனைத்து அரசுப் பணியாளர்களும் தங்களது பணிப் பதிவேட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள பதிவுகளை செல்லிடபேசி செயலி மூலம் பார்வையிட்டு தெரிந்து கொண்டு, தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்றார். இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ், அரசு நிதித் துறை துணைச் செயலர் மா.அரவிந்த், மாவட்ட வன அலுவலர் கௌதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.