Breaking

Thursday, September 05, 2019

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருவையாறு அருகே, யூனியன் துவக்கப் பள்ளியில், செருப்பு காலால், மாணவியை உதைத்த தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, பிள்ளைகளை பெற்றோர் நேற்று பள்ளிக்கு அனுப்பவில்லை. தஞ்சாவூர், திருவையாறு அடுத்த மேலதிருப்பூந்துருத்தி கிராமத்தில் உள்ள, பஞ்சாயத்து யூனியன் துவக்கப் பள்ளியில், 65 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். மூன்று ஆசிரியர், ஒரு தலைமையாசிரியர், சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை, தலைமை ஆசிரியை சுந்தரி, செருப்பு காலால் உதைத்ததாக, மாணவியின் தாத்தா லியாகத்அலி, ஜூன், 25ல், யூனியன் உதவி கமிஷனர் மற்றும் நடுக்காவேரி போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம், மீண்டும் பள்ளிக்கு வந்த சுந்தரியை கண்டித்து, பெற்றோர், பள்ளி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சுந்தரி மீது நடவடிக்கை எடுக்கும் வரை, குழந்தைகளை நேற்று முதல் பள்ளிக்கு அனுப்புவதில்லை என, பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.இதனால், நேற்று குழந்தைகள், பள்ளிக்கு வராமல், ஆசிரியர்கள் மட்டுமே வகுப்பில் தனியாக அமர்ந்திருந்தனர். பள்ளியே வெறிச்சோடி காணப்பட்டது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog