👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் தொழிற்கல்வி நிறுவனத்தின் பெயரில், போலி சான்றிதழ்கள் தயாரித்து, வேலைவாய்ப்பு மோசடி செய்வதாக, புகார்கள் எழுந்துள்ளன.
எனவே, சான்றிதழ்களை ஆய்வு செய்து கொள்ளும்படி, கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளன. மத்திய அரசின் திட்ட குழுவின் கட்டுப்பாட்டில், 'பாரத் சேவக் சமாஜ்' என்ற, கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தொழிற்கல்வி படிப்புசென்னை, தாம்பரத்தில் இதன் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த கல்வி நிறுவனம் வாயிலாக, 1,000க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி படிப்புகள் நடத்தப்படுகின்றன.இந்த நிறுவனத்தில் படித்து முடிப்பவர்களுக்கு, தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
அரசு நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. தொழிற்கல்வி படிப்பை முடிப்பவர்களுக்கு, சான்றிதழும், மதிப்பெண் பட்டியலும் தரப்படுகின்றன. இந்நிலையில், சில தனியார் கல்வி நிறுவனங்கள், பாரத் சேவக் சமாஜ் நிறுவனத்தில் வழங்கப்பட்டதை போன்று, போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்து, மோசடி செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.போலீசில் புகார்இதையடுத்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது, பாரத் சேவக் சமாஜ் சார்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களும், தொழில் நிறுவனங்களும், பாரத் சேவக் சமாஜ் பெயரில் வரும் சான்றிதழ்கள் உண்மையானதா, போலியானதா என, ஆய்வு செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழின் உண்மை தன்மையையும், அதில் உள்ள சிறப்பு அம்சங்களையும்,
http://www.bssve.in/fakecertificate-alert.asp என்ற இணையதள இணைப்பில் தெரிந்து கொள்ளலாம் என, பாரத் சேவக் சமாஜ் அறிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U