👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ராமநாதபுரம் மாவட்டம் கல்கிணற்றுவலசை அரசு உயர்நிலைப்பள்ளியில் குடிநீர் மோட்டாரை இயக்கச் சென்ற 8ம் வகுப்பு மாணவர் மின்சாரம் தாக்கி பலியானார்.
இது தொடர்பாக இரண்டு ஆசிரியர்களை 'சஸ்பெண்ட்' செய்து முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் உத்தரவிட்டார்.உச்சிப்புளி அருகே கல்கிணற்றுவலசை அரசு உயர்நிலைப்பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ரமேஷ், பாக்கியலட்சுமி தம்பதியரின் மகன் கார்த்தீஸ்வரன் 13, எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை 10:45 மணிக்கு பள்ளியில் உள்ள குடிநீர் மோட்டாரை இயக்க சென்றார். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலியானார்.
ராமேஸ்வரம் டி.எஸ்.பி.,மகேஷ், இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த், தாசில்தார் தமிழ்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி பள்ளியில் விசாரணை நடத்தினர். உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர்.பள்ளியில் மாணவர்களை இது போன்று மோட்டார் இயக்கும் பணியில் ஈடுபட செய்த விபரம் குறித்து தலைமையாசிரியர்,ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் மாணவரை ஆசிரியர் தாக்கியதில் பலியாகியிருக்கலாம், என பெற்றோர்கள் சந்தேகித்தனர். பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.மாணவர் உடல் பரிசோதனைக்கு பின் மாணவர் மரணம் குறித்த தகவல்கள் தெரிய வரும். பள்ளியில் அதிகாரிகள் விசாரணை நடத்திய பின் கார்த்தீஸ்வரனை வகுப்பில் இருந்து வெளியே அனுப்பிய ஆசிரியை அபிலாஷா, குடிநீர் மோட்டாரை இயக்க கூறிய ஆசிரியர் தமிழரசு ஆகியோரை முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U