👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு சேர்க்கப்பட்டுள்ள 12 பாடப் பிரிவுகளில் பகவத்கீதை விருப்பப் பாடமாக மாற்றப்படும் என்றார் மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு புதிதாக 32 பாடப் பிரிவுகள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தால் பரிந்துரைக்கப்பட்டு, அதில் 12 பாடப்பிரிவுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வுக் குழுவில் பேராசிரியர்கள், முன்னாள், இந்நாள் மாணவர்கள் மட்டுமே இடம் பெற்றனர்.
இக் குழுவினர் தேர்வு செய்த 12 பாடப் பிரிவுகளில் சம்ஸ்கிருதப் பாடப்பிரிவு இல்லை. மேலும், பகவத்கீதை பாடப்பிரிவு உள்ளது. இந்த பாடப் பிரிவை 12 பாடப் பிரிவுகளில் இருந்து நீக்கி, விருப்பப் பாடப் பிரிவாக மாற்றுமாறு அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விரைவில் நிரப்பப்பட உள்ளன. ஏற்கெனவே இதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான தேதி குறிப்பிடப்பட்டு, அது தற்காலிகமாக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.