👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கும்பகோணத்தில் கல்லூரி பேராசிரியர் சாதி ரீதியில் திட்டியதாகக் கூறி முதுகலை பட்டப்படிப்பு மாணவி ஒருவர் ஆய்வக ரசாயணத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஆலமன் குறிச்சி கிராமத்தை சேர்ந்த மாணவி கவுசல்யா. இவர் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் எம்ஃபில் பட்டப்படிப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் கல்லூரி ஆய்வகத்தில் இருந்த உயரிய உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ரசாயனத்தை அருந்தி மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது மயக்கமடைந்த மாணவியின் நிலை கண்டு அருகில் இருந்தவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தற்போது அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாணவி கூறுகையில், தன்னுடைய ஆய்வக கட்டுரையை பேராசிரியர் ரவிசந்திரன் என்பவரிடம் சமர்பித்ததாகவும் ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாமல் பேராசிரியர் தட்டிக் கழித்ததாகவும் தெரிவித்தார். மேலும் சாதி ரீதியாக தன்னை புறக்கணிப்பதுடன் தனியாக வந்து தன்னை சந்திக்குமாறும் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். சாதி ரீதியாக துன்புறுத்தி தனது மகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய பேராசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் தாயார் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் பற்றி அறிந்த கும்பகோணம் போலீசார் மருத்துவமனை சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U