👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய, 12 தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2018ல், 31 போட்டி தேர்வுகள் நடத்தி, மிகக் குறுகிய நாட்களில் முடிவுகளை வெளியிட்டு, சாதனை படைக்கப்பட்டது. நடப்பாண்டில், தற்போது வரை, 29 போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு, 24 பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.அவற்றில், 23 நேர்முக தேர்வுடன் கூடிய பதவிகளில், 14 பதவிகளுக்கு நேர்முக தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள தேர்வுகளுக்கு, விரைவில், நேர்முக தேர்வு தேதி அறிவிக்கப்படும். இந்நிலையில், மே மாதம் வரை நடத்தப்பட்டுள்ள, 12 போட்டி தேர்வுகளுக்கு, ஒரே நாளில் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவை தேர்வாணையத்தின்,
http://www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.தேர்வை நடத்திய குறுகிய கால இடைவெளியிலில், ஒரே நாளில், 12 தேர்வு முடிவுகள் வெளியிடுவது தேர்வாணைய வரலாற்றில் மிகப்பெரிய சாதனை. தேர்வாணையம் அதிக தேர்வுகளை அறிவித்து, அவற்றை திறம்பட நடத்தி, மிகுந்த வெளிப்படை தன்மையுடன் முடிவுகளை விரைந்து வெளியிட்டுள்ளது. இது, தேர்வர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
தமிழகத்தில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட 29 போட்டி தேர்வில் 24 தேர்வுகளின் முடிவு வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய(டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2018ம் ஆண்டில் பல்வேறு பணிகளுக்கான போட்டி தேர்வுக்கான 31 அறிவிப்புகளை வெளியிட்டது. அனைத்திற்கும் தேர்வுகள் நடத்தி மிகக் குறுகிய நாட்களில் முடிவுகளை வெளியிட்டு மிகப் பெரும் சாதனை படைத்துள்ளது. மேலும் 2019ம் ஆண்டில் தற்போது வரை 29 போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. அவற்றில் 24 (23 நேர்முக தேர்வுடன் கூடிய பதவிகள், 1 நேர்முகத்தேர்வு அல்லாத பதவி) அடங்கும்) பதவிகளுக்கான தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள 23 நேர்முகத்தேர்வுடன் கூடிய பதவிகளில் 14 பதவிகளுக்கான நேர்முகத்தேர்வு நடைபெறும் நாட்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 9 தேர்வுகளுக்கான நேர்காணல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.இதுவரை 2019ல் இதுநாள் வரை 18 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அவற்றில் 14 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றில் 5 தேர்வுகளுக்கு மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டியுள்ளது. குறிப்பாக கடந்த 15ம் தேதி நடந்த தேர்வு தவிர, கடந்த மே மாதம் வரை நடத்தப்பட்டுள்ள 12 போட்டித் தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுச் சாதனையாகும். இதன் மூலம் தேர்வாணையம் மிகக் குறுகிய கால இடைவெளியில், அதிக அளவிலான அறிவிப்புகளை வெளியிட்டு அதற்கான போட்டி தேர்வை திறம்பட நடத்தி, மிகுந்த வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U