👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவக் கல்விக்காக நடத்தப்படும், 'நீட்' நுழைவுத் தேர்வில் இருந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க முடியாது' என, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. லோக்சபாவில், கேள்வி ஒன்றுக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், நேற்று எழுத்து மூலம் அளித்துள்ள பதில்:
மருத்துவக் கல்வி, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. 'மருத்துவ கல்விக்காக தேசிய அளவில் நடத்தப்படும், 'நீட்' நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன
இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில், நாடு முழுவதும், ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. அதன்படியே, நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த சட்டம், நாடு முழுவதற்குமானது;
அதில் எந்த விலக்கும் அளிக்க முடியாது. அதனால், நீட் நுழைவுத் தேர்வில் இருந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு எந்த விலக்கும் அளிக்க முடியாது. இவ்வாறு பதிலில் கூறப்பட்டுள்ளது.
மற்றொரு கேள்விக்கு, அமைச்சர், ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் அளித்து உள்ள பதில்:
குறிப்பிட்ட சில நாடுகளில் வழங்கப்படும், ஒரு ஆண்டு முதுநிலை பட்டப் படிப்புகளை அங்கீ கரிக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை.
அதே நேரத்தில், சில நாடு களில் நடைமுறையிலுள்ள பட்டப் படிப்புகள், நாம் அங்கீகாரம் அளித்துள்ள பட்டப் படிப்புகளில் இருந்து வேறுபட்டுள்ளன. இது போன்ற பட்டப் படிப்புகளை அங்கீகரிப்பது குறித்து ஆராய, குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு அளித்த பரிந்துரையின் படி, இது போன்ற நாடுகளுடன் பேசவுள்ளோம். இவ்வாறு, பதிலில் கூறப்பட்டுள்ளது.
நீட்' தேர்வில் விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகளிடமிருந்து வரப் பெற்ற வேண்டுதல்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.
இது தொடர்பாக மக்களவை உறுப்பினர்கள் வே.வைத்திலிங்கம், ராஜேஷ்பாய் நரன்பாய் சௌடாஸமா, ஆ.ராசா, எம்.செல்வராஜ், மாணிக்கம் தாகூர் ஆகியோர் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் நிஷங்க் மக்களவையில் திங்கள்கிழமை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்த பதில் விவரம்:
மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் மருத்துவக் கல்வி வருகிறது. இளநிலை, முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட்' தேர்வில் இருந்து தமிழகம், புதுச்சேரி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி இரு மாநில அரசுகளிடமிருந்து அமைச்சகத்திற்கு கோரிக்கை வந்துள்ளது. எனினும், இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956, 10 டி பிரிவானது மருத்துவ சேர்க்கைக்கான நீட்' தேர்வை நடத்துவதற்குப் பரிந்துரைக்கிறது. மேற்கண்ட சட்டத்தின் பிரிவுகள் மாநிலங்களுக்கு விலக்கும், தளர்வும் இன்றி நாடு முழுவதும் பொருந்துகிறது. நீட்' தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
அதே வேளையில், கூட்டு நுழைவுத் தேர்வு (பிரதானம்) ஆண்டுக்கு இருமுறை கணினி சார்ந்த தேர்வாக (சிபிடி) நடத்தப்படுகிறது. நீட்' தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி சிபிஎஸ்இ மூலம் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டது. நீட்' தேர்வில் தேர்ச்சி அடையாமல் போனதற்காக மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டதாக எந்தவிதத் தகவலும் இல்லை என மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளதாக அந்த பதிலில் அமைச்சர் போக்கிரியால் குறிப்பிட்டுள்ளார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U