👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
"நிறைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கணக்குப் பாடம் தான் மிகப்பெரிய பிரச்னை என்பார்கள். டியூஷன், வீடியோ க்ளாஸ் என எப்படிச் சொல்லிக்கொடுத்தாலும் அதைப் புரிஞ்சுக்க நிறைய சிரமப்படுறாங்கனு சொல்லுவாங்க. ஏதோ ஓரிடத்தில் கணக்குப்பாடம் மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகக்கூட கணக்கு பிடிபடாமல் போகலாம் என்பது என் கணிப்பு. கணக்கை இனிமையாகக் கற்றுக்கொள்ள மாற்றுவழிதான் 'ரூபிக்ஸ் க்யூப்'. இது மூலம் கணக்குப் பாடத்தை எளிமையாகக் கற்றுத்தர முடியும் என்று
பேச ஆரம்பிக்கிறார் தமிழ்நாடு ரூபிக்ஸ் க்யூப் அசோஷியேசனின் தலைவர் சந்திரிகா.
கணிதத்திற்கும் க்யூப்பிற்கும் என்ன சம்பந்தம் என்ற ஆச்சர்யத்துடன் சந்திரிகாவிடம் கேட்க,"குழந்தைகளுக்கு எதைக் கற்றுக்கொள்ள கடினமா இருக்கோ அதை, அவங்களுக்கு பிடிச்ச விஷயத்தின் மூலமா விளக்க ஆரம்பிச்சா எளிதா புரிஞ்சுப்பாங்க, ஆர்வத்துடனும் கத்துப்பாங்க. இதுதான் என்னோட பாலிசி. அதை தான் க்யூப் விளையாட்டு மூலமாக நடைமுறைப்படுத்திட்டு இருக்கேன்'' எனத் தெளிவாக விளக்க ஆரம்பித்தார் சந்திரிகா.
click here to watch the video
''குழந்தைகளுக்கு க்யூப் கத்துக்கொடுக்கிறதுதான் என்னோட புரொபஷன். உண்மையைச் சொல்லணும்னா தமிழ்நாட்டில் இது வரை க்யூப் கற்றுக்கொடுக்கிறதுக்குனு எந்தப் பயிற்சி வகுப்புகளும் இருந்ததில்லை. தமிழ்நாட்டிலேயே, க்யூபிற்கான பயிற்சி வகுப்புகளை நான்தான் ஆரம்பிச்சேன். க்யூப்ங்கிறது நிறங்களை ஒன்று சேர்க்கும் ஒரு விளையாட்டு. அதுக்கெல்லாம் பயிற்சி வகுப்புகள் அவசியமானு என்னிடம் கேட்ட பெற்றோர்களே, பயிற்சி வகுப்புகளுக்கு அப்புறம் குழந்தைகளிடம் ஏற்படும் மாற்றத்தைப் பார்த்துட்டு என்னைப் பாராட்டி இருக்காங்க.
க்யூப்ங்கிறது நிறங்களை ஒன்று சேர்க்கும் ஒரு விளையாட்டு என்பதைத்தாண்டி மனசு, கண், கைகளை ஒரே சமயத்தில் இயங்க வெச்சு அதில் வெற்றியைக் கொடுக்குற நிகழ்வுனுதான் சொல்லணும்.
நம்ம இந்தியாவைப்பொறுத்தவரை 10 விதமான க்யூப் விளையாட்டுகள்தான் நடைமுறையில் இருக்கு. ஆனால், உலகளவில் மொத்தம் 2500க்கும் மேற்பட்ட க்யூப் விளையாட்டுகள் இருக்கு. நான் இதுவரை 300 வகையான க்யூப்களை விளையாடி வெற்றி பெற்றிருக்கேன். இந்தியாவில் கிடைக்காத க்யூப் வகைகளை வெளிநாடுகளிலிருந்து வாங்கி பயிற்சிகள் எடுத்துக்கிட்டேன். 300 வகையான க்யூப் விளையாட்டுகளை கத்துக்க எனக்கு சில வருடங்கள் ஆச்சு. ஒவ்வொரு க்யூப்பிலும் நிறங்களை எப்படியெல்லாம் ஒன்று சேர்க்கணும், என்னென்ன வழிமுறைகள் இருக்குனு குறிப்புகள் எடுத்துக்கிட்டேன். எனக்கு தெரிந்ததை மத்தவங்களுக்கு கத்துக்கொடுக்குற ஆர்வத்தில்தான் பயிற்சி வகுப்புகளையே ஆரம்பிச்சேன்.
க்யூப்பில் உள்ள நிறங்களை ஒன்று சேர்க்கிறது எனக்கு எளிதாதான் இருந்துச்சு. அதை மத்தவங்களுக்கு எப்படி கத்துக்கொடுக்கிறதுனு முதல்ல குழப்பமா இருந்தது. அதனால ஆன்லைனில் எப்படி கத்துக்கொடுக்கிறாங்கனு தேட ஆரம்பிச்சேன். பார்த்த அணுகுமுறைகள் எல்லாம் தவறா இருந்தது. கடைசியா அமெரிக்காவில் உள்ள ஒரு பள்ளியில் க்யூப் பயிற்சிகள் கொடுக்கும் தகவல் தெரிஞ்சு, அந்தப் பள்ளியைத் தொடர்பு கொண்டு தெளிவடைஞ்சேன்.
க்யூ விளையாடுறப்ப இப்படித்தான் நிறங்களை ஒன்று சேர்க்கணும் அப்படிங்கிற எந்த விதிமுறையும் கிடையாது. அதனால், நானே குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரியான கதைகளை உருவாக்கி நிறங்களை ஒன்று சேர்க்கும் ஐடியாவை உருவாக்கினேன். என்கிட்ட க்யூப் கத்துக்க வர்ற குழந்தைகளிடம் முதலில் பொறுமையா பேசி, அவங்களுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுனு தெரிஞ்சுப்பேன். அவங்களுக்கு பிடிச்ச ஒன்றை ஒரு நிறமாகவும், பிடிக்காத ஒன்றை ஒரு நிறமாகவும் வைத்து அதற்கு ஏற்ப ஒரு கதையினை உருவாக்கி நிறங்களை ஒன்று சேர்க்க கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன்.
க்யூப்பை முதல் முறையாகக் கையாளும் குழந்தைகள், அதை ஒன்று சேர்க்க 20 நிமிடத்திற்கு மேல் எடுத்துக்கொள்வார்கள். பிறகு, கொடுக்கப்படும் பயிற்சிகள் மூலம் 20 விநாடிகளுக்குள் சேர்க்கும் வழக்கத்திற்கு வந்துவிடுவார்கள். இதில் உலகளவில் சாதனை படைக்கலாம் என்பதை என் மாணவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அடுத்தகட்டம் என்னனு யோசிக்கிற போதுதான் க்யூப் மூலமாகக் கணிதம் கத்துக்கொடுக்கிற ஐடியா ஸ்பார்க் ஆச்சு.
ஒவ்வொரு நிறத்தையும் ஒவ்வொரு எண்களாக எடுத்துக்கிட்டு, அவர்கள் செய்ய வேண்டிய கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் முறைகளை க்யூப் பயன்படுத்தி கற்றுக்கொடுக்க ஆரம்பிச்சேன். குழந்தைகளிடையே நல்ல மாற்றம் தெரிஞ்சுது. அடிப்படைகளை விளையாட்டு மூலமாக எளிமையாக புரிஞ்சுக்கிட்ட குழந்தைகள் அடுத்தடுத்த கணித முறைகளை நேரடியாகச் செய்ய ஆரம்பிச்சாங்க.
தேர்வுகளுக்கு க்யூப்களை எடுத்துட்டு போக முடியாது இல்லையா?அதனால் நிறங்களை வெச்சு பயிற்சி எடுத்துக்கிட்டு கணக்குப் போட ஆரம்பிச்சுட்டாங்க. கணக்கைப் பார்த்து மிரண்ட குழந்தைகள் கூட இப்போ கணக்குப் பாடத்தில் ஆர்வம் ஆயிட்டாங்க." என்ற சந்திரிகா, க்யூப் கற்றுக்கொள்வதில் உள்ள மற்ற நன்மைகளை விளக்க ஆரம்பித்தார்.
கை விரல்களுக்கு வேலை கொடுப்பதால் குழந்தைகளின் விரல்கள் வலுப்பெற்று கையெழுத்து அழகாக மாறும்.
யோசிக்கும் திறன் வளர்ச்சி பெறும்.
பிரச்னைகளை தீர்க்கும் திறன் வலுப்பெறும்.
மொபைல், டிவி பார்க்க அடம்பிடிக்கும் தன்மை மாறும்.
பாசிட்டிவ் எண்ணங்கள் அதிகமாக இருக்கும்
போட்டி மனப்பான்மை, அடுத்தவர்களின் மீது பொறாமை கொள்வது போன்ற செயல்பாடுகளில் மாற்றம் இருக்கும்.
குழந்தைகளில் இயல்பினைப் பொறுத்து ஒரு க்யூப் முறையினை ஒரு வாரத்தில் கற்றுக்கொள்ள முடியும். அடிப்படையினைக் கற்றுக்கொண்ட குழந்தைகள் அடுத்தடுத்த க்யூப்களை அவர்களே கூட எளிமையாக முயற்சி செய்ய முடியும்.
க்யூப் மூலம் அவர்கள் கடினமாக நினைக்கும் எந்தப் பாடத்தையும் ஒரு கதையாக உருவாக்கி அவர்களுக்குப் பயிற்சி செய்ய முடியும். இதன் மூலம் பாடங்களை புரிந்துகொண்டு படிக்கவும் கற்றுக்கொள்வார்கள்" என்கிறார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U