👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் வரி வருவாயை அதிகரிப்பதற்காக கடந்த ஆண்டை விட நடப்பு நிதியாண்டில் மேலும் கூடுதலாக சுமார் 1.30 கோடி பேர்களை வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய வைப்பதற்கான முயற்சிகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் எடுத்து வருகிறது. தனி நபர் (Individual), தனி நபரின் கீழ் உள்ள அமைப்புகள் (Body of Inditidual), இந்து கூட்டுக் குடும்பங்கள் (Hindu Undivided Family) மற்றும் சங்கங்கள், அமைப்புகளுக்கு (Association of Persons) ஐடி ரிட்டன் தாக்கல் செய்ய ஜூலை 31ஆம் தேதி கடைசி நாளாகும். வர்த்தக நிறுவனங்கள், அதாவது ரூ. 2 கோடிக்கும் கூடுதலாக விற்று முதல் (Turn over) கொண்ட தணிக்கை செய்யப்படவேண்டிய பரிவர்த்தனைகளை கொண்ட நிறுவனங்களுக்கு செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி தேதியாகும்.
கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் வழக்கத்தை விட கூடுதலாக சுமார் 1.10 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ள நிலையில் நடப்பு நிதியாண்டில் அதை விட கூடுலாக இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கையை வருமான வரித்துறை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளது.
வருமான வரி ரிட்டன்களை ஆன்லைனில் தாக்கல் செய்வதை நடைமுறைப்படுத்தி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒவ்வொரு ஆண்டும் தொழில்நுட்பங்கள் வளர வளர வருமான வரி ரிட்டன்களில் புதிய புதிய மாற்றங்களை மத்திய நேரடி வரிகள் ஆணையம்(CBDT) செய்து வருகிறது.
வருமான வரித்துறை ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ரிட்டன்களில் மாற்றம் செய்வதற்கு ஏற்ப தணிக்கையாளர்களும் தங்களை மேம்படுத்திக் கொள்கின்றனர். மாதச் சம்பளம் வாங்குவோரும் யாருடைய வழிகாட்டுதலும் இன்றி தாங்களாகவே வருமான வரி ரிட்டன்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
மத்திய அரசுக்கு செல்லும் வருவாயில் முன்னிலை வகிப்பது வருமான வரியே. இதில் இருந்து கிடைக்கும் வருவாயை வைத்து மத்திய அரசானது, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது மற்றும் நலத்திட்ட உதவிகளுக்கு செலவழிப்பது போன்ற அடிப்படை திட்டங்களுக்கு செலவழிக்க முடிகிறது.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையோ கிட்டத்தட்ட 130 கோடி பேர்களாக உயர்ந்துவிட்டது. ஆனால் இதில் முறையாக வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையோ சுமார் ஒன்று முதல் 2 சதவிகிதம் பேர் மட்டுமே என்று கடந்த 2017-18ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கான முயற்சியை மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes-CBDT) தொடர்ந்து எடுத்து வருகிறது. வருமான வரித்துறையின் சீரிய முயற்சியை அடுத்து கடந்த நிதியாண்டில் வழக்கத்தை விட சுமார் 1.10 கோடி பேர் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்தனர்.
நடப்பு 2019-20அம் ஆண்டில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான மத்திய செயல் திட்டத்தை (Central Action Plan) மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த வெள்ளியன்று வெளியிட்டது. இது வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் செயல் திட்ட அறிக்கையாகும்.
வருமான வரித்துறையில் மொத்தம் 18 மண்டலங்கள் உள்ளன. இதில் நடப்பு 2019-20ஆம் ஆண்டில் குறிப்பாக, வடமேற்கு மண்டலத்தில் இருந்து 12 லட்சத்து 50 ஆயிரத்து 683 ரிட்டன்களும், புனே மண்டலத்தில் 12 லட்சத்து 22 ஆயிரத்து 676 ரிட்டன்களும், குஜராத் மண்டலத்தில் 11 லட்சத்து 96 ஆயிரத்து 129 ரிட்டன்கள், தமிழ்நாட்டில் 9 லட்சத்து 35 ஆயிரத்து 501 ரிட்டன்கள், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 9 லட்சத்து 22 ஆயிரத்து 465 ரிட்டன்களும் தாக்கல் செய்யப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
வரையறுக்கப்பட்ட மற்றும் வரையறுக்கப்படாத அல்லது முறை சாராத துறைகளில் அதிகரித்துள்ள பொருளாதார நடவடிக்கைகளை கருத்தில் கொண்டே நாட்டின் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நேரடி வரிகள் அமைப்பினை மேலும் விரிவுபடுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன என்று மத்திய செயல் திட்ட அறிக்கை தெளிவாக விளக்கியுள்ளது.
மத்திய செயல் திட்டத்தில், தரவுகளை செயல் படுத்துதல் (Data Mining) மற்றும் தரவுகளை பகுப்பாய்வு செய்தல் (Data Analytics) ஆகியவற்றின் காரணமாக வரி செலுத்தும் சாத்தியக்கூறுகள் உள்ளவர்களை அடையாளம் காண்பதற்கான புதிய வாய்ப்புகளும் இதில் கொண்டவரப்பட்டுள்ளன. இந்தத் தரவுகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முறையாக கையாள்வதன் மூலமாக அதிக அளவில் வரி செலுத்துவோர் அடையாளம் காணப்படுவார்கள் என்றும் செயல் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருங்கும் கடைசி நாள்
தனி நபர் (Individual), தனி நபரின் கீழ் உள்ள அமைப்புகள் (Body of Inditidual), இந்து கூட்டுக் குடும்பங்கள் (Hindu Undivided Family) மற்றும் சங்கங்கள், அமைப்புகளுக்கு (Association of Persons) ஐடி ரிட்டன் தாக்கல் செய்ய ஜூலை 31ஆம் தேதி கடைசி நாளாகும். வர்த்தக நிறுவனங்கள், அதாவது ரூ. 2 கோடிக்கும் கூடுதலாக விற்று முதல் (Turn over) கொண்ட தணிக்கை செய்யப்படவேண்டிய பரிவர்த்தனைகளை கொண்ட நிறுவனங்களுக்கு செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி தேதியாகும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U