👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள 8 முதல் 12 வரையிலான மேல்நிலை வகுப்புகள் அனைத்துக்கும் செப்டம்பர் இறுதிக்குள் கணினி மற்றும் இணையதள வசதி ஏற்படுத்தப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்
.
விருதுநகரில் காமராஜர் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெறுகிறது. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இங்குள்ள கே.வி.எஸ்.மேல்நிலைபள்ளியில் நடைபெற்றன.
இதில், தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது: நாட்டில் இருக்கும் அடித்தட்டு மக்கள் சிறந்த கல்வி பெற வேண்டும் என தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் காமராஜர்.
இந்த ஆண்டு செப்டம்பர் இறுதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் 8 முதல் 12 -ஆம் வகுப்பு வரை கணினி மயமாக்கப்பட்டு, இணையதள வசதியும் செய்து கொடுக்கப்படும். மேலும், மாணவர்கள் வளர்ந்து வரும் விஞ்ஞான உலகை நோக்கிச் செல்வதால் 6 முதல் 8 வரை நவீன வகுப்பறைகள், செம்டம்பர் மாத இறுதிக்குள் உருவாக்கப்படும்.
மேலும், நாட்டில் உள்ள 7 ஆயிரம் பள்ளிகளுக்கு தலா ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்க மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது
. இதில், தமிழகத்தில் மட்டும் ஆயிரம் பள்ளிகளில் இவை அமைய உள்ளன. இந்த முன்னேற்றங்களுக்குக் காரணம் பெருந்தலைவர் காமராஜர் வகுத்த பாதைதான் என்றார்.
நிகழ்ச்சியில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.25ஆயிரம், 2 -ஆம் பரிசு ரூ.15ஆயிரம், 3 ஆம் பரிசு ரூ.10ஆயிரம் மற்றும் சான்றிதழ்களையும் அமைச்சர்கள் வழங்கினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U