Breaking

Tuesday, July 16, 2019

மாநில கவர்னர்கள் பொம்மைகளா? அரசு தேர்வில் கேட்கப்பட்ட அதிர வைக்கும் கேள்வி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
"பீகார் சர்வீஸ் கமிஷன் தேர்வில், மாநில கவர்னர்கள் பொம்மைகளா?" என கேட்கப்பட்ட கேள்வி தேர்வு எழுதியவர்களை அதிர வைத்துள்ளது. பீகார் அருசு தேர்வு நேற்று (ஜூலை 14) நடந்தது. பொது அறிவு பிரிவில், "இந்தியாவில் மாநில அரசியலில் கவர்னர்களின் பங்கு என்ன என்பது அறிவது கடினமானதாக உள்ளது. குறிப்பாக பீகாரில். அவர் என்ன பொம்மையா? " என கேள்வி ஒன்று கேட்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் வெளியில் கசிந்து சர்ச்சையானது. இதனையடுத்து விளக்கம் அளித்த பீகார் சர்வீஸ் கமிஷன் அதிகாரிகள், இது போன்ற கேள்விகளுக்கும் எங்கள் உறுப்பினர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வினாத்தாளை தயார் செய்த ஆசிரியரின் தவறு. இருப்பினும் கேள்வியில் தவறில்லை. பொம்மை என்ற வார்த்தையை மட்டும் தவிர்த்திருக்க வேண்டும் என்றனர். 2 ஆண்டுகளுக்கு முன் இதே போன்று நடத்தப்பட்ட அரசு தேர்வில் 5 நாடுகள் என குறிப்பிடப்பட்ட கேள்வியில் சீனா, நேபாளம், இங்கிலாந்து, இந்தியா மற்றும் காஷ்மீர் என குறிப்பிட்டிருந்ததும் சர்ச்சையாக்கப்பட்டது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog