Breaking

Monday, July 15, 2019

கல்விக் கொள்கை: சூர்யாவின் பேச்சு வன்முறையைத் தூண்டுகிறது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையைத் தூண்டும் விதமாக உள்ளது என்று பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய எச்.ராஜா, ''நடிகர் சூர்யா ஒரு விழாவில் பேசும்போது சொல்கிறார். நாம் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை உள்ளே வந்துவிடும் என்று. அதற்கு என்ன அர்த்தம்? மக்கள் அமைதியாக இருக்கக் கூடாது. வன்முறையாளராக இருக்கவேண்டும் என்றுதானே அர்த்தம். அப்படி அவர் பேசலாமா?
அது பொறுப்பான பேச்சா? மற்றுமொரு மொழி விருப்பப் பாடம் என்று சொன்னாலே, இஷ்டப்பட்டால் படிக்கலாம் என்றுதானே அர்த்தம்? எனில் எங்கே இருந்து திணிப்பு வருகிறது? அந்த 400 பக்கத்தில், நீங்கள் 4 வரியை ஒழுங்காகப் படித்திருக்கிறீர்களா? திமுக எம்.பி. கனிமொழி இந்தி படிக்கும்போது மக்கள் இந்தி படிக்கக்கூடாதா? இந்தி படிக்கக்கூடாது என்று சொல்லும் திமுகவினர் வீடுகளின் முன்பு, ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். மக்களை ஏமாற்றுகிறார்கள். ஏமாற்றுகிற கூட்டத்தில் இருந்து தமிழகர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது'' என்றார் எச்.ராஜா. புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதாக பாரதிய ஜனதா தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, “ மூன்று வயதிலேயே மூன்று மொழிக் கல்வி திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் இதனை எப்படி சமாளிக்கப்போகிறார்கள்..?. எல்லோரும் அமைதியாக இருந்தால், இது திணிக்கப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை மீதான ஆலோசனைகளை, மாற்றங்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், என அனைவருமே ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள்” என கூறியிருந்தார். இந்நிலையில் புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதாக பாரதிய ஜனதா தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாஜகவின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியபோது அவர் இவ்வாறு கூறினார். திமுக எம்.பி. கனிமொழி இந்தி படிக்கும்போது, மக்கள் இந்தி படிக்க கூடாதா? என கேள்வி எழுப்பிய ஹெச்.ராஜா, இந்தி படிக்க கூடாது என கூறும் திமுகவினர் வீடுகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் பேசினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog