👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்தியாவில் ஒரு துறையில், இன்னும் அரசு நிறுவனம் கொடி கட்டிப் பறக்கிறது, தனியார் நிறுவனங்கள் எல்லாம் தெறித்து ஓடுகிறார்கள் என்றால்.. அது லைஃப் இன்ஷூரன்ஸ் துறையில் இருக்கும் LIC மட்டும் தான்.
கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் மட்டும் இந்தியாவில் லைஃப் இன்ஷூரன்ஸுக்காக 4.58 லட்சம் கோடி ரூபாயை பிரீமியமாகச் செலுத்தி இருக்கிறார்கள் மக்கள். அந்த 4.58 லட்சம் கோடி ரூபாயில் LIC பங்கு மட்டும் 3.18 லட்சம் கோடி ரூபாய்.
இந்த LIC என்கிற ஒரே ஒரு நிறுவனம் தான் இந்திய லைஃப் இன்ஷூரன்ஸ் சந்தையில் 70 சதவிகிதத்தை தன் கைக்குள் வைத்திருக்கிறது. பாக்கி உள்ள 23 தனியார் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒன்றாகச் சேர்த்தால் கூட LIC-க்கு அருகில் கூட வர முடியவில்லை. சரி LIC Jeevan Saral ஊழல் விஷயத்துக்கு வருவோம்
ஒரு பாலிசி
1956-ல் LIC தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரை பல இன்ஷூரன்ஸ் பாலிசிகளைக் கொண்டு வந்திருக்கிறது. பாலிசி சரி இல்லையா, அதை மீண்டும் திருத்தி வெளியிட்டிருக்கிறது. அதுவும் ஒத்து வரவில்லையா..? பாலிசியை ரத்து செய்திருக்கிறார்கள். ஆனால் LIC Jeevan Saral பாலிசி மட்டும் தனித்து நிற்கிறது. இந்த ஒற்றை பாலிசியால் இன்று உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிக் கொண்டிருக்கிறது நம் LIC.
அந்த பாலிசி
பிதாகரஸ் தேற்றம் (pythagoras theorem) தெரியுமா..? டக் வொர்த் லீவிஸ் (duckworth lewis) முறை பற்றித் தெரியுமா..? அந்த அளவுக்கு நான்கு இடியாப்பத்தை பிய்த்துப் போட்டு ஆரம்பத்தையும் முடிவையும் தேடுவதற்கு சமம்... இந்த LIC-ன் ஜூவன் சரல் பாலிசி. இந்த பாலிசியைப் பற்றி பலரிடம் விசாரித்தோம். LIC ஊழியர்கள், LIC ஏஜெண்ட்கள் என யாரைக் கேட்டாலும் முழுமையாகத் தெரியாது என ஒதுங்கிக் கொள்கிறார்கள். அது தான் இந்த ஒரு லட்சம் கோடி ஊழல் நடந்ததாக வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதற்கும் காரணம். இந்த LIC ஜீவன் சரல் திட்டத்தில் பணம் போட்டவர்களிடம் விசாரித்தால், பலரும் கடுப்பில் இருப்பது தான் முதலில் தெரிய வருகிறது. பாலிசி டாக்குமெண்ட்களும் நமக்குக் கிடைக்கவில்லை.
என்ன பிரச்னை
ஆனால் இந்த LIC Jeevan Saral பாலிசியால் பொதுமக்கள் எப்படி ஏமாந்திருக்கிறார்கள் என Money Life என்கிற பத்திரிகை தன் வலைதளத்தில் கூடுமான வரை விளக்க முயற்சித்திருக்கிறது. ஆக அங்கிருந்து பாலிசியைப் பற்றிப் பார்ப்போம்.
டேர்ம் இன்ஷூரன்ஸ்
டேர்ம் இன்ஷூரன்ஸ் என்றால் என்ன..? ஒருவர் திடீரென இறந்துவிட்டால் அவர் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் கவரேஜ் தொகையை அப்படியே அவர் குடும்பத்துக்கு கொடுத்துவிடுவார்கள். இதற்கு பிரீமியம் குறைவாகத் தான் இருக்கும்.
உதாரணத்துக்கு, 25 வயதுள்ள ஒருவருக்கு 1 கோடி ரூபாய்க்கு, 10 ஆண்டு காலத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவருக்கு ஆண்டு பிரீமியம் 6,000 - 10,000 வரை வசூலிக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனம். இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கும், இந்த 10 ஆண்டு காலத்துக்குள் இறந்துவிட்டால், இன்ஷூரன்ஸ் நிறுவனம் இவருக்கு ஒரு கோடி ரூபாய் க்ளெய்ம் கொடுக்கும். ஒருவேளை 10 ஆண்டு பாலிசி காலத்தில் இறக்கவில்லை என்றால், இந்த பிரீமியம் தொகை திரும்ப கொடுக்கப்படாது.
LIC Jeevan Saral
இப்போது LIC Jeevan Saral இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை அப்படியே கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்க்கிறார்கள். யாரும் செய்யாத படிக்கு, ஒரே பாலிசியில் இரண்டு மாற்றங்களைக் கொண்டு வருகிறார்கள்.
1. டேர்ம் இன்ஷூரன்ஸ் போல பாதுகாப்பு உண்டு.
2. பாலிசிக்கும் கொடுத்த பிரீமியம் பணம் திருப்பிக் கொடுக்கப்படும்... எனக் கொண்டு வருகிறார்கள்.
அந்த பாலிசியின் பெயர் LIC ஜீவன் சரல். இந்த பாலிசியை வடிவமைத்த ஜி என் அகர்வால் தான் அன்றைய எல் ஐ சி நிறுவனத்தை ஆக்ச்வரி (Actuary)-ஆக பதவியில் இருந்தார். அவரே நேரடியாக பல LIC அலுவலகங்களுக்கும், கூட்டங்களுக்கும் வந்து LIC Jeevan Saral திட்டத்தை விளக்கினார்.
வகுப்பில் சொன்னது
LIC வரலாற்றிலேயே முதன்முறையாக LIC-ன் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வடிவமைக்கும் Actuary-யே வந்து ஒரு பாலிசியை விளக்கினார். LIC Jeevan Saral பாலிசியை ஜி என் அகர்வால் விளக்கும் போது
1. மூன்று வருடங்களுக்குப் பின் பாலிசியை சரண்டர் செய்யும் போது எந்த ஒரு நட்டமும் இல்லாமல் சரண்டர் செய்வது.
2. சரல் என்றால் எளிமை என்று பொருள். பெயருக்கு ஏற்றார் போல, இந்த பாலிசியும் எளிமையாக இருப்பது.
3. நல்ல வருமானம், அதிக வருமானம், மற்ற முதலீடுகளை விட நல்ல வருமானம், நல்ல உள் நோக்கம்... இது தான் இந்த பாலிசியின் நோக்கம் என விளக்கியது.
4. ஆண்டுக்கு 9% வரை வட்டி ஈட்டலாம் எனச் சொல்லி பாலிசியை விற்றது....
என வளைத்து வளைத்துப் பேசினார். ஆனால் நட்டத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை. யார்ய்ம் கேட்கவும் இல்லை. அந்த கேள்வியே கேட்காமல் LIC Jeevan Saral-ஐ விற்க ஏஜெண்டுகளும், LIC அதிகாரிகளும் தயாரானார்கள். பாலிசி விற்பனை கலைகட்டத் தொடங்கியது.
மக்கள் கணிப்பு
அட பிரமாதமான பாலிசியா இருக்கே..? செத்தா வீட்டுக்கு பணம் வந்துடும். சாகலையா... பாலிசி காலம் முடிந்த பின் பணத்தை திரும்ப வாங்கிக் கொள்ளலாம்.. என சபாஷ் போட்டு LIC Jeevan Saral-ல் சம்பாதித்த காசை எல்லாம் போட்டார்கள் நடுத்தர மக்கள். குறிப்பாக வயதானவர்கள். LIC Jeevan Saral பாலிசி ஒரு காலத்தில் பட்டையைக் கிளப்பும் பாலிசியாக உருமாறியது. யார் LIC-க்கு வந்தாலும் ஜீவன் சரலை தலையில் கட்டுவதில் ஒரு பெரிய கும்பல் தயாராக இருந்தது. பலரும் நம்பி வாங்கினார்கள். டிசம்பர் 2013-ல் இந்த பாலிசியை நிறுத்தும் வரை, இந்தியா முழுக்க சுமார் 5 கோடி பேருக்கு இந்த LIC ஜீவன் சரல் திட்டத்தை விற்று இருந்தார்கள். இறந்தவர்களுக்கு முறையாக பாலிசியில் சொல்லி இருக்கும் சம் அஷ்ஷூர்ட் (Sum Assured) தொகை க்ளெய்ம் கொடுத்தார்கள். பாலிசி மெச்சூரிட்டி ஆன பின் சென்று க்ளெய்ம் கேட்டால் அத்தனை பேருக்கும் ஆச்சர்யம் காத்திருந்தது.
உதாரணம்
பாட்டில் என்பவருக்கு அன்று 58 வயது பூர்த்தியாகிவிட்டது. 12 வருடங்கள் முன், பாட்டிலுக்கு (46 வயதில்) இந்த LIC Jeevan Saral பாலிசியில் பணத்தை போடத் தொடங்கினார். 12 வருடத்தில் பாலிசி மெச்சூர் ஆகிவிட்டது. அவர் பிரீமியமாக மொத்தம் 97,824 ரூபாய் செலுத்தி இருந்தார். சரி எப்படியும் க்ளெய்மாக 98,000 ரூபாயாவது வரும் என நம்பி க்ளெய்ம் கேட்டு விண்ணப்பிக்கிறார். ஆச்சர்யம். வெறும் 34,405 ரூபாய் தான் க்ளெய்ம் கிடைக்கிறது. இதுவும் போனஸ் எல்லாம் சேர்த்து. இதை எதிர்த்து பாட்டில், இன்ஷூரன்ஸ் சார்ந்த குறைகலைத் தீர்க்கும், இன்ஷூரன்ஸ் ombudsman மும்பை பிரிவில் புகார் அளித்தார்.
சிக்கல்
என்ன பிரச்னை என பலரிடம் விசாரித்துப் பார்க்கிறார் பாட்டில். LIC Jeevan Saral பாலிசி விவரங்களில் இறந்து விட்டால் (Death Sum Assured) 1.25 லட்சம் ரூபாய் கொடுப்போம் எனச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் பாலிசி காலம் மெச்சூரிட்டி (Maturity sum Assured) அடைந்தால் எவ்வளவு பணத்தைக் கொடுப்பேன் எனச் சொல்லவில்லை. ஆக LIC Jeevan Saral பாலிசிக்கு இரண்டு Sum assured இருக்கிறது. ஆனால் பல பாலிசி டாக்குமெண்ட்களில் ஒரே ஒரு Sum Assured (இறந்தால் கிடைக்கும் பணமான Death sum Assured) மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார்கள். மெச்சூரிட்டியானால் கிடைக்கும் Maturity Sum Assured குறிப்பிடவில்லை. ஆகையால் தான் மெச்சூர் ஆன LIC Jeevan Saral பாலிசிகளுக்கு, எல் ஐ சி இஷ்டத்துக்கு ஏதோ ஒரு தொகையை க்ளெய்மாகக் கொடுக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U