பிஎஸ்சி நர்சிங் பட்டம் பெற்று திருநங்கை சாதனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 30, 2019

பிஎஸ்சி நர்சிங் பட்டம் பெற்று திருநங்கை சாதனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்தது. தமிழக ஆளுநரும் வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். இதில், பிஎஸ்சி நர்சிங் பட்டம் பெற்ற திருநங்கை ரக்சிகா ராஜ். எம்பிபிஎஸ் படிப்பில் 4 தங்கம், 2 வெள்ளி உட்பட 12 பதக்கம் பெற்ற குன்றத்தூர் மாதா மருத்துவக் கல்லூரி மாணவி எம்.ஏ.எம்.ரஹீமா. எம்பிபிஎஸ் படிப்பில் 2 தங்கம், 3 வெள்ளி உட்பட 7 பதக்கம் பெற்ற சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர் பி.நாராயணன். படங்கள்: ம.பிரபு
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழாவில் 22,929 பேர் பட்டம் பெற்றனர். பிஎஸ்சி நர்சிங் பட்டம் பெற்று திருநங்கை சாதனை படைத்துள்ளார். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடைபெற்றது. தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பன்வாரிலால் புரோ ஹித் விழாவுக்கு தலைமை தாங்கினார். சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், துணைவேந்தர் சுதா சேஷய்யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பங்கேற்றார். கிண்டியில் உள்ள பல்கலைக் கழகத்தின் வெள்ளி விழா கூட்டரங்கிலும் பட்டமளிப்பு விழாநடைபெற்றது. 2 இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் வலைதளம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு, காணொலி மூலம் இரண்டு கூட்டரங் குகளிலும் ஒளிபரப்பப்பட்டது. இந்த விழாவில் இளநிலை, முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம், ஆயுஷ், செவிலி யர், மருந்தாளுநர் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளை முடித்தவர்கள் பட்டம் பெற்றனர். இதில் நேரடியாக 4,745 பேரும், மற்ற வகையில் 18,184 பேர் என மொத்தம் 22,929 பேர் பட்டம் பெற்றனர். 139 மாணவ, மாணவிகள் மொத்தம் 204 தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை பெற்றனர்.
எம்பிபிஎஸ் படிப்பில் குன்றத் தூர் மாதா மருத்துவக் கல்லூரி மாணவி எம்.ஏ.எம்.ரஹீமா 4 தங்கம், 2 வெள்ளி என மொத்தம் 12 பதக்கங்களை பெற்று சாதனைப் படைத்தார். கன்னியாகுமரி ஸ்ரீமூகாம்பிகா மருத்துவ கல்லூரி மாணவி ஐ.பி.வண்ணமலர் ஒரு தங்கம் ஒரு வெள்ளி உட்பட 9 பதக்கங்களையும், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர் பி.நாராயணன் 2 தங்கம், 3 வெள்ளி உட்பட 7 பதக்கங்களையும் பெற்றனர். இந்த விழாவில் தமிழக மருத்துவத் துறை வரலாற்றில் முதல்முறையாக பிஎஸ்சி செவிலியர் பட்டப்படிப்பு முடித்த திருநங்கை யான ரக்சிகா ராஜுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதுதொடர்பாக ரக்சிகா ராஜ் கூறும்போது, “வாலாஜாபாத் எனதுசொந்த ஊர். நான் கல்லூரியில் சேரும்போது, திருநங்கைகள் நர்சிங் படிக்க முடியாத நிலை இருந்தது. அதனால், ராஜ்குமார் என்ற பெயரில் ஆணாகவே சேர்ந்தேன். பின்னர், எனது பெயரை ரக்சிகா ராஜ் என்று மாற்றிக் கொண்டேன். பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் நர்சிங் படிப்பில் சேர்ந்தேன்” என்றார்.
இந்த விழாவில் நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பேசும் போது, “முன்பெல்லாம் நோயாளியின் உடலில் இருந்து வெளிப்படும் வாசனையை வைத்தே அவருக்குள்ள நோயை நம் மருத்துவர்கள் கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இன்றைக்கு அத்தகைய உள்ளுணர்வு சார்ந்து பணியாற்றக் கூடிய மருத்துவர்கள் இல்லை. மாறாக மருத்துவ உபகரணங்களையே அவர்கள் நம்புகின்றனர். மற்றொரு புறம் மருத்துவர்கள் மீது நோயா ளிகள் கொண்டிருக்கும் மதிப்பும் குறைந்து வருகிறது. இயற்கையின் நியதியைத் தாண்டி மருத்துவர்கள் மாயாஜாலம் புரிய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். எதார்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்” என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews