பொறியியல் தரவரிசைப் பட்டியலில் 6-வது இடம் பிடித்த சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 30, 2019

பொறியியல் தரவரிசைப் பட்டியலில் 6-வது இடம் பிடித்த சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்காக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில், சென்னை மாநகராட்சிப் பள்ளியில் படித்த மாணவர் எஸ்.ஸ்ரீபிரியன் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். தமிழகம் முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 25-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதற்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடந்த 20-ம் தேதி வெளியிட்டார். அதில் சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர் எஸ்.ஸ்ரீபிரியன் 199.5 கட்- ஆஃப் மதிப்பெண்களுடன் 6-ம் இடம் பிடித்துள்ளார்.
போரூரை அடுத்த காரப் பாக்கத்தில் வசித்துவரும் இவர்,விருகம்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் 600-க்கு 552 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இவரது தந்தை ஜெ.சண்முகம் தினக்கூலியாக உள்ளார். இவரது தாய் மலர்விழி இல்லத்தரசியாக உள்ளார். இந்த மாணவர் தரவரிசைப் பட்டியலில் சிறப்பிடம் பெற்றது தொடர்பாக மாநகராட்சி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “நான் கடந்த 30 ஆண்டுகளாக கல்வித்துறையில் பணியாற்றி வருகிறேன். இதுவரை ஒரு மாணவர்கூட, பொறியியல் தரவரிசைப் பட்டியலில் இந்த அளவுக்கு உயர்ந்த இடத்தை பிடிக்கவில்லை” என்றார்.
தரவரிசைப் பட்டியலில் சிறப்பிடம் பிடித்தது தொடர்பாக, மாணவர் ஸ்ரீபிரியன் கூறும்போது, “எனது பெற்றோர் கடன் வாங்கி, தனியார் பள்ளியில் படிக்கவைக்க விரும்பினர். ஆனால் நான் அரசுப் பள்ளியில் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அரசுக் கல்லூரியில் தான் படிப்பேன் என்றேன். அதேபோன்று எனக்கு அரசு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கஉள்ளது. எனது கல்வியையும், திறமையையும், தமிழக மக்களுக்காகவும், தமிழக அரசுக்காகவும் செலவிட விரும்புகிறேன்” என்றார். நேற்று நடைபெற்ற மாநகராட்சி நிகழ்ச்சி ஒன்றில், மாணவர் எஸ்.ஸ்ரீபிரியனை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, செயலர் ஹர்மேந்தர் சிங்,மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் ஆகியோர் வாழ்த்தினர். இம்மாணவருக்கான கல்விக் கட்டணத்தை மாநகராட்சி நிர்வாகமே வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews