Breaking

Saturday, May 11, 2019

பேராசிரியர்களுக்கான கலந்தாய்வை எதிர்த்து வழக்கு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
அரசு மருத்துவக் கல்லூரிகளில் இணைப் பேராசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பணி ஒதுக்கீடு நீதிமன்றத்தின் மறு உத்தரவுக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் இணைப் பேராசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் கடந்த மே 9 மற்றும் 10- ஆம் தேதிகளில் நடந்தது. இந்தக் கலந்தாய்வில் தங்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் கலந்துகொள்ள உத்தரவிடக் கோரி டாக்டர்கள் செந்தில்குமரன் மற்றும் சண்முகவேலாயுதம் உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டார். மேலும் மனுதாரர்களுக்கான கலந்தாய்வு முடிவை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் மருத்துவக் கல்வி இயக்குநரகம் அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்ய வேண்டும். மேலும் இந்தக் கலந்தாய்வின் பணி இடஒதுக்கீடு முடிவு இந்த நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவுக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog