👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வின் முடிவில் காலியாக உள்ள இடங்களை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் நிரப்புவதற்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்புகளுக்கு 1,761 இடங்கள் உள்ளன. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 849 இடங்கள் போக, மீதமுள்ள 912 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கானவை. அவை தவிர, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்காக 181 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அண்மையில் நடைபெற்றது. முதல்கட்ட கலந்தாய்வில் 999 இடங்கள் நிரம்பின. அதன் தொடர்ச்சியாக, மீதமுள்ள இடங்கள், கல்லூரிகளில் சேராதவர்களால் ஏற்படும் காலியிடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்பக் கிடைக்கும் இடங்கள் என மொத்தம் 800 இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.
அதன் முடிவிலும் 76 இடங்கள் இன்னும் நிரம்பாமல் இருந்தன. அவை அனைத்தும் நான் கிளீனிக்கல் எனப்படும் மயக்கவியல், உடற்கூறுயியல் போன்ற படிப்புகளுக்கான இடங்கள் என்று தெரிவித்த மருத்துவக் கல்வி இயக்குநரகம், கடந்த மூன்று நாள்களுக்கு முன்னர் சிறப்பு கலந்தாய்வு ஒன்றை நடத்தியது. அதன் முடிவிலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சில இடங்கள் நிரம்பாமல் காலியாக இருப்பதாகத் தெரிகிறது. இந்த நிலையில், அவ்வாறு உள்ள இடங்களை, விதிகளுக்கு உள்பட்டு நிரப்பிக் கொள்ள சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U