👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
திருச்சியில் ஜீன் 14 ஆம் தேதி நடைபெறுகிறது.
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் 2019 ஜீன் 14, 15 & 16 தேதிகளில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ளே ஸ்ரீநிவாசா ஹாலில் உலகப் பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள் மற்றும் பழங்கால பொருட்கள் கண்காட்சியினை நடத்துகிறது.
சேகரிப்புக் கலை என்பது, அரும்பொருட்களைச் சேகரித்தல் ஆகும்.
அவற்றைக் காட்சிக்கு வைத்தல் அதன் வரலாற்றினை இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைத்து பழங்கால பொருட்களை பாதுகாக்கும் நோக்கங்களுக்காக கண்காட்சி நடத்தப்படுகிறது.
இவை, மக்கள் மற்றும் அவர்கள் வாழ்ந்த சூழல் தொடர்பான சான்றுகளை அறியவும், மனமகிழ்ச்சி, கல்வி, ஆய்வு போன்ற நோக்கங்களுக்காகச் சேகரிப்பதுடன், அவற்றைப் பாதுகாத்தும், ஆய்வுகளை நடத்தியும், அதனை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தியும், காட்சிப்படுத்தவும் உதவுகின்றன.
இது, சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், அதன் சேவைக்குமானதாக உள்ளது.
பழம் பொருட்களின் மேல் ஆர்வம் கொண்டவர்கள், தனிப்பட்டவர்கள், குடும்பங்கள், நிறுவனங்கள் போன்றவர்களால் சேகரிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு சேகரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப் படுகின்றன.
சேகரிப்பு பொருட்களின் அறிவியல், கலை, மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களைச் சேகரித்துப் பாதுகாத்து, மக்களுடைய பார்வைக்காகக் காட்சிப் படுத்துகின்றனர்.
கண்காட்சியில்
நுண்கலைகள், பயன்படு கலைகள், கைப்பணி, தொல்லியல், மானிடவியல், இன ஒப்பாய்வியல், வரலாறு, பண்பாட்டு வரலாறு, படைத்துறை வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம், இயற்கை வரலாறு, நாணயவியல், தாவரவியல், விலங்கியல், அஞ்சற்பொருள் சேகரிப்பு , பணத்தாள்கள் சேகரிப்பு போன்ற துறைகளுக்காகத் தனித்தனியாக சேகரிப்பாளர்கள் காட்சிப் படுத்துகிறார்கள்.
இதன் தொன்மையான வரலாறு சமூகப் பொருளாதார வாழ்க்கை முறைகள் நாட்டுப்புற வாழ்விட முறைகள், தொழில்நுட்ப வரலாறு, நாட்டுப்புற மக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு,வரலாறு போன்றவற்றைக் காட்டும் விடயங்கள் இளம் தலைமுறையினரிடையே கொண்டு சேர்க்கும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சேகரிப்பு கலை அறிவு திறன் வினாடி வினா போட்டி திருச்சியில் ஜீன் 14 ஆம் தேதி நடைபெறுகிறது.
போட்டியில் தபால் தலைகள், நாணயங்கள், பணத்தாள்கள், பழங்கால பொருட்கள் குறித்த வினா கேட்கப்படும். சிறப்பாக விடையளிக்கும மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்படும்.
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார், செயலர் குணசேகர், பொருளாளர் அப்துல்அஜீஸ், முகமது சுபேர், பாண்டி, கமலக்கண்ணன், சந்திரசேகரன் உள்ளிட்ட நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்துள்ளனர். மேலும்
விவரங்களுக்கு
98424 12247 அலைபேசியில் தொடர்பு கொள்ளவும்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U